ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் இருந்த பாஜகவை ஓரங்கட்டிவிட்டு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தற்போது முன்னிலை வகித்து வருகிறது.
ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் இந்தியாவே உற்றுநோக்கும் தேர்தலாக மாறியுள்ளது. இன்று வெளியாகிவரும் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகளின்படி முதலில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்துவந்தது. தற்போது தெலங்கானாவின் ஆளுங்கட்சியான டிஆர்எஸ் முன்னிலைவகிக்க தொடங்கியுள்ளது. ஹைதராபாத்தின் மொத்தமுள்ள 150 வார்டுகளில் முன்பு 87 வார்டுகளில் முன்னிலை வகித்த பாஜக தற்போது 23 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. முன்பு 33 வார்டுகளில் முன்னிலையில் இருந்த தெலங்கானாவின் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தற்போது 63 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி 32 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு வார்டில் கூட முன்னிலையில் இல்லை.
வாக்குச்சீட்டு முறையில் நடந்த இந்த தேர்தலின் வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2VOsAbbஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் இருந்த பாஜகவை ஓரங்கட்டிவிட்டு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தற்போது முன்னிலை வகித்து வருகிறது.
ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் இந்தியாவே உற்றுநோக்கும் தேர்தலாக மாறியுள்ளது. இன்று வெளியாகிவரும் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவுகளின்படி முதலில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்துவந்தது. தற்போது தெலங்கானாவின் ஆளுங்கட்சியான டிஆர்எஸ் முன்னிலைவகிக்க தொடங்கியுள்ளது. ஹைதராபாத்தின் மொத்தமுள்ள 150 வார்டுகளில் முன்பு 87 வார்டுகளில் முன்னிலை வகித்த பாஜக தற்போது 23 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. முன்பு 33 வார்டுகளில் முன்னிலையில் இருந்த தெலங்கானாவின் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி தற்போது 63 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி 32 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு வார்டில் கூட முன்னிலையில் இல்லை.
வாக்குச்சீட்டு முறையில் நடந்த இந்த தேர்தலின் வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்