இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. ஏறக்குறைய 9 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணி களமிறங்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
கொரோனாவுக்கு பின் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி தலா 3 டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட திட்டமிட்டிருந்தது. ஒரு நாள் தொடரை 1க்கு 2 என்ற கணக்கில் இழந்த இந்தியா, அதற்கு பதிலடியாக இருபது ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் வீரர்களின் மன நிலையையும், உடற் தகுதியையும் சோதிக்கும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதல் போட்டியே பிங்க் பந்துகளில் விளையாடும் பகலிரவு ஆட்டம் என்பது கூடுதல் சுவாரஸ்யம். இரு அணிகளிடையே ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த கடைசி டெஸ்ட் தொடரை, இந்தியா 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்திருந்தது. கிட்டத்தட்ட அத்தொடரில் களமிறங்கிய நட்சத்திர வீரர்களுடனே இந்திய அணி, இந்தாண்டும் இந்திய அணி களமிறங்கவுள்ளது.
ஆனால் முதல் போட்டிக்குப் பின் கேப்டன் விராட் கோலி தாயகம் திரும்பிவிடுவார் என்பது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் கடைசி 3 போட்டிகளுக்கு தலைமை பொறுப்பை ஏற்கவுள்ள ரஹானே, சிறப்பாக செயல்படுவார் என விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் திறம்பட பங்காற்றும் அனுபவ பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, காயம் காரணமாக வெளியேறியுள்ளதும் இந்திய அணிக்கு பின்னடைவே.
ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில் முக்கிய வீரர்கள் பலரும் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். இருப்பினும் பந்து வீச்சில் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், பேட்ஸ்மேன்களில் ஸ்மித், லாபுஷேன் ஆகியோர் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகின்றனர்.
டெஸ்ட் சாம்பியன் ஷிப்பிலும் இந்த தொடர் கணக்கில் கொள்ளப்படும் என்பதால், அனல் பறக்கும் ஆட்டங்களுக்கு பஞ்சமிருக்காது என கருதப்படுகிறது. தொடரை வெல்லும் பட்சத்தில் டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு இந்திய அணிக்கு பிரகாசமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2WlBBZxஇந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. ஏறக்குறைய 9 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணி களமிறங்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
கொரோனாவுக்கு பின் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி தலா 3 டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட திட்டமிட்டிருந்தது. ஒரு நாள் தொடரை 1க்கு 2 என்ற கணக்கில் இழந்த இந்தியா, அதற்கு பதிலடியாக இருபது ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் வீரர்களின் மன நிலையையும், உடற் தகுதியையும் சோதிக்கும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முதல் போட்டியே பிங்க் பந்துகளில் விளையாடும் பகலிரவு ஆட்டம் என்பது கூடுதல் சுவாரஸ்யம். இரு அணிகளிடையே ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த கடைசி டெஸ்ட் தொடரை, இந்தியா 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்திருந்தது. கிட்டத்தட்ட அத்தொடரில் களமிறங்கிய நட்சத்திர வீரர்களுடனே இந்திய அணி, இந்தாண்டும் இந்திய அணி களமிறங்கவுள்ளது.
ஆனால் முதல் போட்டிக்குப் பின் கேப்டன் விராட் கோலி தாயகம் திரும்பிவிடுவார் என்பது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் கடைசி 3 போட்டிகளுக்கு தலைமை பொறுப்பை ஏற்கவுள்ள ரஹானே, சிறப்பாக செயல்படுவார் என விராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் திறம்பட பங்காற்றும் அனுபவ பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, காயம் காரணமாக வெளியேறியுள்ளதும் இந்திய அணிக்கு பின்னடைவே.
ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில் முக்கிய வீரர்கள் பலரும் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். இருப்பினும் பந்து வீச்சில் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், பேட்ஸ்மேன்களில் ஸ்மித், லாபுஷேன் ஆகியோர் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகின்றனர்.
டெஸ்ட் சாம்பியன் ஷிப்பிலும் இந்த தொடர் கணக்கில் கொள்ளப்படும் என்பதால், அனல் பறக்கும் ஆட்டங்களுக்கு பஞ்சமிருக்காது என கருதப்படுகிறது. தொடரை வெல்லும் பட்சத்தில் டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு இந்திய அணிக்கு பிரகாசமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்