(வெற்றிக் கொண்டாட்டத்தில் காரட் ஃபைசல்)
கேரளாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஒருவர், ஒரு ஓட்டு கூட பெறாதது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோழிக்கோடு மாவட்டம் கொடுவள்ளியை சேர்ந்த காரட் ஃபைசல், கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியதால், உள்ளாட்சித் தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சீட் தர மறுத்துவிட்டது. அவருக்கு பதிலாக வேறொருவரை வேட்பாளராக நிறுத்தியது. இதனால், ஆத்திரம் அடைந்த காரட் ஃபைசல் கொடுவள்ளியில் உள்ள 15 ஆம் வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டார். முடிவில் காரட் ஃபைசல் வெற்றி பெற மார்க்சிஸ்ட் வேட்பாளர் தோல்வி அடைந்தார்.
(காரட் ஃபைசல்)
இதில், வேதனையான விஷயம் என்னவென்றால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு ஒரு ஓட்டுக்கூட கிடைக்கவில்லை என்பது தான். இத்தனைக்கும் வேட்பாளர் வீட்டில் ஐந்து ஓட்டுகள் இருக்கின்றன. தவிர வேட்பாளர் ஓட்டும் மாற்று கட்சிக்கு பதிவானது கட்சி தலைமையை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. சுயேச்சையாக நின்றாலும் காரட் ஃபைசலுக்கு மார்க்சிஸ்ட் தொண்டர்கள் மறைமுகமாக ஆதரவு அளிக்க கேட்டுக்கொண்டதாகவும், அதன்படியே அவர் வெற்றி பெற்றதாகவும் புகார் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து, தோல்வி குறித்து தனது வேட்பாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விசாரணை நடத்தி வருகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்