Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

“யாரையும் பாதிக்காமல் விவசாயிகள் போராட்டம் நடத்தலாம்” - உச்சநீதிமன்றம் கருத்து

யாரையும் பாதிக்காமல் விவசாயிகள் போராட்டம் நடத்தலாம் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

டெல்லியில் போராட்டம் நடத்தக்கூடிய விவசாயிகளை அகற்ற வேண்டும் என்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், விவசாய சங்கங்கள் தொடர்ந்த வழக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு தொடங்கியவுடன் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த போராட்டம் டெல்லியை கடுமையாக பாதித்திருக்கிறது. விலைவாசி உயர்வு ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது” என குற்றம் சாட்டினார்.

image

அப்போது கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி “எந்த ஒரு சட்டத்திற்கு எதிராகவோ, அரசின் நடவடிக்கைக்கு எதிராகவோ எந்த ஒரு குடிமகனும் போராட்டம் நடத்தலாம். அதற்காக இந்திய அரசியல் சாசனம் அதற்கான உரிமையை வழங்கியுள்ளது. ஆனால் மற்றவருடைய போராட்டங்கள் யார் ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதித்துவிடக்கூடாது. இன்றைய வழக்கின் விசாரணையின் போது விவசாயிகளின் போராட்டங்கள் தொடர்பான விவரங்கள் மட்டும் தான் விசாரிக்க போகிறோம். இன்றைய தினம் முக்கியமான முடிவுகள் என்பது அறிவிக்கப்படும். சட்டங்களுக்கு எதிரான வழக்குகளை தற்போதைக்கு விசாரிக்க போவதில்லை. அதை பொறுமையாக விசாரிப்போம்” எனத் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3nn9hSh

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்