Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

கொரோனா தடுப்பு மருந்தை கையாள தயாராகும் இந்தியா

அவசர பய‌‌‌‌ன்பாட்டிற்காக கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மருந்தை விமானம் மற்றும் ரயில்கள் மூலமாக பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வந்தும் முடிந்தபாடில்லை. இதில் வைரஸ் உருமாற்றம் வேறு அடைந்துள்ளது. இதனிடையே பல்வேறு நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பு மருந்தை கையாள இந்தியாவும் தயாராகி வருகிறது. வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டால் அதனை சேமித்துவைக்க டெல்லி உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் தனியாக குளிர்பதன சேமிப்புக் கிடங்குகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல ரயில்களில் தடுப்புமருந்து எடுத்துச் செல்ல வசதியாக, சிறப்பு குளிர்சாதன பெட்டிகளை உருவாக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி வடிவில் இருப்பதாகவும், ரயில்கள் மூலமாக தடுப்பூசி எடுத்துச் செல்வது சாத்தியம்தான் என்கிறார் ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ். சிறப்பு குளிர்சாதன ரயில் பெட்டிகளை தயாரிக்கக்கூடிய மையங்கள் உத்தரப்பிரதேசத்திலும், டெல்லியிலும் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் சிறப்பு பெட்டிகளை விரைவாக தயாரிக்க முடியும்.

image

சாலைவழி போக்குவரத்தைப் பொறுத்தவரை சிறப்பு குளிர்சாதன கன்டெய்னர் லாரிகளை உருவாக்கி அதன் மூலம் தடுப்பு மருந்து விநியோகம் செய்யவும் மத்திய அரசு திட்டம் வைத்துள்ளது. அதேபோல தடுப்பு மருந்துகளை கையாள்வது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து மாநில அரசுகளுக்கு வழங்கி, அதற்கான அடிப்படை கட்டமைப்புகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தடுப்பூசிகளை எவ்வாறு செலுத்துவது, கையாளும் போது செய்ய வேண்டியது என்ன என்பது உள்ளிட்டவை குறித்து மாநில அரசுகளுடன் செயல்முறை விளக்க கூட்டங்களை நடத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3n2Ju0O

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்