நடிகர் ரஜினியிடமிருந்து தன்னைப் பிரிக்க சதி நடப்பதாக தமிழருவி மணியன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஜனவரியில் கட்சி துவங்க இருப்பதாகவும், டிசம்பர் 31 ஆம் தேதி கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் நேற்று அறிவித்த ரஜினி “என் பாதையில் வெற்றி அடைவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது. அது நடக்கும்'' என்று கூறினார்.
இந்நிலையில், ரஜியின் தொடங்கும் கட்சியின் மேற்பார்வையாளராக அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்ட தமிழருவி மணியன், ரஜினியிடமிருந்து தன்னைப் பிரிக்க சதி நடப்பதாக பரபரப்புக் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், "ரஜினி முதல்வர் வேட்பாளாரா, இல்லையா என்பது பற்றி நான் எந்த ஊடகத்திடமும் பேசவில்லை. ரஜினியிடமிருந்து என்னைப் பிரிக்க சதி நடக்கிறது” என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்