அரசாங்கம் முன்னெடுக்க விரும்பும் எழுத்துப்பூர்வமான சட்டதிருத்தங்கள் பற்றிய விவரம் இன்று விவசாயிகள் போராட்ட தலைவர்களுக்கு அனுப்பப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன்பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுப்பதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று நடந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் விவசாயிகள் தலைவர்களுடனான சந்திப்பு தோல்வியுற்றது. இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் தங்கள் நிலைகளில் உறுதியாக இருந்தனர், சட்டங்களை திருத்துவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவை விவசாயிகள் ஏற்க மறுத்து, சட்டத்தை முழுமையாக ரத்துசெய்ய கோரிக்கை வைத்தனர். எனவே மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமருடன் இன்று நடைபெறவிருந்த விவசாயிகள் தலைவர்களின் ஆறாவது கட்ட பேச்சுவார்த்தை ரத்துசெய்யப்பட்டுள்ளது.
உழவர் சங்கங்களுக்கு நேற்று மசோதாக்கள் குறித்த விளக்கக்காட்சி வழங்கப்பட்டதாகவும், அரசாங்கம் முன்னெடுக்க விரும்பும் எழுத்துப்பூர்வ திருத்தங்களுடன் இன்று விவசாயத் தலைவர்களுக்கு ஒரு திட்டம் அனுப்பப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"விவசாயிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இன்று (புதன்கிழமை) எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படாது. விவசாயிகள் தலைவர்களுக்கு இன்று ஒரு திட்டம் வழங்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். இந்த திட்டம் குறித்து விவாதிக்க விவசாயிகள் தலைவர்கள் கூட்டம் நடத்துவார்கள்" என்று அகில இந்திய கிசான் சபாவின் செயலாளர் கூறியுள்ளார்.
விவசாயிகள் கூட்டம் இன்று மதியம் சிங்கு எல்லையில் நடைபெறும். "மத்திய அரசால் அனுப்பப்படும் வரைவு தொடர்பாக நாங்கள் ஒரு கூட்டத்தை நடத்துவோம். இதனால் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுகிறது. அந்த வரைவு குறித்து விவாதிக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். இன்று மாலை 4 அல்லது 5 மணியளவில் இதுபற்றிய விஷயங்கள் தெளிவாக தெரியும் என்று நாங்கள் நம்புகிறோம் " என பாரதிய கிசான் யூனியனின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்தார்.
மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான கடைசி இரண்டு சந்திப்புகளில் சட்டங்களில் திருத்தம் செய்வதற்கான உறுதி வழங்கப்பட்டது. இது விவசாயிகளால் நிராகரிக்கப்பட்டது. நேற்று நாடுதழுவிய அளவில் நடந்த பாரத பந்த் பல மாநிலங்களில் இயல்புவாழ்கையை பாதித்தது. இதனால் நேற்று இரவு 9 மணியளவில் அமித்ஷா தலைமையில் நடந்த இந்த பேச்சுவார்த்தைக்கு எட்டு விவசாயிகள் தலைவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர். பஞ்சாபின் மிகப்பெரிய விவசாயிகள் சங்கமான பாரதிய கிசான் யூனியன் உக்ரஹான் கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை. இந்த சூழலில் அப்பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2VVMXmQஅரசாங்கம் முன்னெடுக்க விரும்பும் எழுத்துப்பூர்வமான சட்டதிருத்தங்கள் பற்றிய விவரம் இன்று விவசாயிகள் போராட்ட தலைவர்களுக்கு அனுப்பப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன்பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுப்பதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று நடந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் விவசாயிகள் தலைவர்களுடனான சந்திப்பு தோல்வியுற்றது. இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் தங்கள் நிலைகளில் உறுதியாக இருந்தனர், சட்டங்களை திருத்துவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவை விவசாயிகள் ஏற்க மறுத்து, சட்டத்தை முழுமையாக ரத்துசெய்ய கோரிக்கை வைத்தனர். எனவே மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமருடன் இன்று நடைபெறவிருந்த விவசாயிகள் தலைவர்களின் ஆறாவது கட்ட பேச்சுவார்த்தை ரத்துசெய்யப்பட்டுள்ளது.
உழவர் சங்கங்களுக்கு நேற்று மசோதாக்கள் குறித்த விளக்கக்காட்சி வழங்கப்பட்டதாகவும், அரசாங்கம் முன்னெடுக்க விரும்பும் எழுத்துப்பூர்வ திருத்தங்களுடன் இன்று விவசாயத் தலைவர்களுக்கு ஒரு திட்டம் அனுப்பப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"விவசாயிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இன்று (புதன்கிழமை) எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படாது. விவசாயிகள் தலைவர்களுக்கு இன்று ஒரு திட்டம் வழங்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். இந்த திட்டம் குறித்து விவாதிக்க விவசாயிகள் தலைவர்கள் கூட்டம் நடத்துவார்கள்" என்று அகில இந்திய கிசான் சபாவின் செயலாளர் கூறியுள்ளார்.
விவசாயிகள் கூட்டம் இன்று மதியம் சிங்கு எல்லையில் நடைபெறும். "மத்திய அரசால் அனுப்பப்படும் வரைவு தொடர்பாக நாங்கள் ஒரு கூட்டத்தை நடத்துவோம். இதனால் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுகிறது. அந்த வரைவு குறித்து விவாதிக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். இன்று மாலை 4 அல்லது 5 மணியளவில் இதுபற்றிய விஷயங்கள் தெளிவாக தெரியும் என்று நாங்கள் நம்புகிறோம் " என பாரதிய கிசான் யூனியனின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்தார்.
மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான கடைசி இரண்டு சந்திப்புகளில் சட்டங்களில் திருத்தம் செய்வதற்கான உறுதி வழங்கப்பட்டது. இது விவசாயிகளால் நிராகரிக்கப்பட்டது. நேற்று நாடுதழுவிய அளவில் நடந்த பாரத பந்த் பல மாநிலங்களில் இயல்புவாழ்கையை பாதித்தது. இதனால் நேற்று இரவு 9 மணியளவில் அமித்ஷா தலைமையில் நடந்த இந்த பேச்சுவார்த்தைக்கு எட்டு விவசாயிகள் தலைவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர். பஞ்சாபின் மிகப்பெரிய விவசாயிகள் சங்கமான பாரதிய கிசான் யூனியன் உக்ரஹான் கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை. இந்த சூழலில் அப்பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்