வங்கக்கடலில் உருவாகவுள்ள புயல், குமரிக்கடல் வழியே கடந்து செல்லும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றுள்ள கன்னியாகுமரி மீனவர்களை மீட்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புயல் எச்சரிக்கையை அடுத்து கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற 500க்கும் அதிகமான விசைப்படகுகள் கரைத்திரும்பியுள்ளன. அதேசமயம், தொடர்பு கொள்ள முடியாத வகையில் 200 நாட்டிக்கலுக்கு அப்பால் உள்ள சுமார் 100 படகுகள் இன்னும் கரைத் திரும்பவில்லை.
கடந்த 2017-ஆம் ஆண்டு உருவான ஒக்கி புயலால் ஏராளமான உயிர்களை இழந்த கன்னியாகுமரி கடலோர மக்கள் தற்போது கலக்கமடைந்துள்ளனர். கடலில் சுமார் ஆயிரம் மீனவர்கள் புயல் குறித்த எந்த எச்சரிக்கையும் இன்றி இருப்பதாகவும் அவர்களை பாதுகாப்பாக மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. விமான மூலமாகவோ, கப்பல் மூலமாகவோ மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்க அவர்களது உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3mp5OCkவங்கக்கடலில் உருவாகவுள்ள புயல், குமரிக்கடல் வழியே கடந்து செல்லும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றுள்ள கன்னியாகுமரி மீனவர்களை மீட்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புயல் எச்சரிக்கையை அடுத்து கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்ற 500க்கும் அதிகமான விசைப்படகுகள் கரைத்திரும்பியுள்ளன. அதேசமயம், தொடர்பு கொள்ள முடியாத வகையில் 200 நாட்டிக்கலுக்கு அப்பால் உள்ள சுமார் 100 படகுகள் இன்னும் கரைத் திரும்பவில்லை.
கடந்த 2017-ஆம் ஆண்டு உருவான ஒக்கி புயலால் ஏராளமான உயிர்களை இழந்த கன்னியாகுமரி கடலோர மக்கள் தற்போது கலக்கமடைந்துள்ளனர். கடலில் சுமார் ஆயிரம் மீனவர்கள் புயல் குறித்த எந்த எச்சரிக்கையும் இன்றி இருப்பதாகவும் அவர்களை பாதுகாப்பாக மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. விமான மூலமாகவோ, கப்பல் மூலமாகவோ மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்க அவர்களது உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்