வேளாண் சட்டங்களை திரும்ப பெறும்வரை விவசாயிகளின் போராட்டத்திற்கு திமுக துணைநிற்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை முன்னிறுத்தி பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு நடத்திய 4 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் வேளாண் சட்டங்களை எதிர்த்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் உடையார்பட்டி எஸ்.ஆர்.பி கிரிக்கெட் மைதானத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஸ்டாலின், “போராட்டத்திற்கு வரும் தொண்டர்களையும் விவசாயிகளையும் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்து வருகின்றனர். இங்கு முடித்துவிட்டு எல்லாரையும் சந்தித்துவிட்டுதான் செல்வேன். ஒரு இடத்தில்தான் போராட்டம் நடத்த முடிவு செய்தோம். ஆனால் அதிமுக அரசு சேலம் முழுவதும் போராட்டம் நடத்துங்கள் என இவ்வாறு செய்கிறது. சீப்பை ஒளித்துவைத்தால் திருமணம் நிற்குமா?
இது விவசாயிகளுக்காக நடத்தும் போராட்டம் என்பதை அதிமுக அரசும், காவல் அதிகாரிகளும் புரிந்து கொள்ள வேண்டும். நாங்களும் சாப்பாடுதான் சாப்பிடுகிறோம். நீங்களும் அதே உணவைத்தான் சாப்பிடுகிறீர்கள் என்பதை காவல்துறை உணர வேண்டும். வேளாண்சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராடும்போது மோடி அதில் ஏராளமான நன்மைகள் இருப்பதாக பேசுகிறார். அதில் என்ன நன்மை இருக்கிறது என்பதை சொல்லவில்லை.
விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதாரவிலை கிடைக்கும் என வாய்வழியாக கூறும் மோடி ஏன் சட்டமாக இயற்றவில்லை என்பதுதான் விவசாயிகளின் கேள்வியாக உள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என மோடி தெரிவித்தார். ஆனால் இருந்த வருமானமும் அவர்களுக்கு போய்விட்டது.
3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும். அதுவரை போராட்டம் தொடர வேண்டும். விவசாயிகளை அழைத்து பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ய வேண்டும். ஜனநாயகத்திற்கு கட்டுப்பட்ட கட்சி என்பதை பாஜக இதன்மூலம் நிரூபிக்க வேண்டும். ஏழைத்தாயின் மகன் என்பது உண்மையானால் பிரதமர் மோடி இந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். அதுவரை விவசாயிகளின் போராட்டத்திற்கு திமுக துணை நிற்கும்” எனத் தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2VM9tOBவேளாண் சட்டங்களை திரும்ப பெறும்வரை விவசாயிகளின் போராட்டத்திற்கு திமுக துணைநிற்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்