நடிகர் ரஜினி, ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் மக்கள் சேவை கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஆட்டோ சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் இக்கட்சி, ரஜினி சார்பிலேயே தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக பாபா முத்திரை சின்னத்தை ரஜினி கேட்ட நிலையில், அதனை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்க உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டார். புதிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பவரையும் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமனம் செய்திருந்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3nfGa3c

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்