விபத்தின்போது தங்களது காருக்கு மேல் ஒரு கார் பறந்து சென்றது என்று தருமபுரி சாலை விபத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதி பயங்கர விபத்தில் சிக்கியுள்ளது. இதில் 4 பேர் உயிரிழந்த நிலையில் தப்பியோடிய கனரக லாரியின் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
சேலத்தில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மின்னல் வேகத்தில் வந்த கனரக லாரியால் நிகழ்ந்த விபத்து பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் தொப்பூர் கண்வாய் சரிவுப்பாதையில் இருசக்கர வாகனம் மற்றும் மினிலாரி மோதி சிறிய விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சாலையில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றுள்ளன. அப்போது சிமெண்ட் மூட்டைகளுடன் வேகமாக வந்த கனரக லாரி ஒன்று அணிவகுந்து நின்ற வாகனங்கள் மீது அதேவேகத்தில் மோதியது.
அப்பகுதி சரிவான சாலை என்பதால் 12 கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்தில் சிக்கியது. சுமார் 5 கார்கள் நொருங்கி பெரியளவில் சேதமாயின. இதனால் காரில் இருந்தவர்கள் அலறிய நிலையில், அங்கிருந்த வாகன ஓட்டிகள் காயத்துடன் காரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டர். சிறிது நேரத்தில் மீட்பு குழுவினரும் அங்கு விரைந்தனர். அப்போது 3 பேர் நிகழ்விடத்திலேயே சடலமாக மீட்கப்பட்டனர். பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு 4ஆக அதிகரித்தது.
இதனிடையே விபத்து காரணமாக சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக அங்கு ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு விபத்தில் சிக்கிய வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. விபத்து ஏற்படுத்திய கனரக லாரியின் ஓட்டுநர் தப்பியோடிய நிலையில் அவரை தேடி வருகின்றனர். விபத்து நடந்த இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் கார்த்திகா, எஸ்பி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது விபத்து குறித்து விசாரணைக்கு நடைபெற்று வருவதாகவும், வரும் காலங்களில் குறிப்பிட்ட இடத்தில் விபத்து ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
இதனையடுத்து இந்த விபத்தை நேரில் பார்த்த ஜோதி என்பவர் அளித்தப் பேட்டியில் "எங்கள் கார் பின்னாடி அடுத்தடுத்து கார்கள் மோதின. எங்கள் கார்க்கு மேல் ஒரு கார் சென்றது. காரில் இருந்த பெண்கள், குழந்தைகள் தவித்தனர்.கார்கள் மீது மோதிதான் கனரக லாரியே நின்றது.விபத்து ஏற்பட்டதும் லாரி ஓட்டுநர் தப்பியோடினார்" என்று பதைபதைப்புடன் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்