மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி செய்து வருகிறது. இந்தக் கூட்டணி கலையும் என பாஜக தெரிவித்தாலும், வெற்றிகரமாக 2-வது ஆண்டை அடி எடுத்து வைத்துள்ளது இந்தக் கூட்டணி. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் திடீர் அதிருப்தியை வெளிப்படுத்திருப்பது கூட்டணியில் தற்போது விரிசல் விழும் நிலைக்கு சென்றுள்ளது.
என்ன நடந்தது?!
சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் கட்சி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் செயல்பாடுகள் குறித்து பேசினார். அப்போது `ராகுல்காந்தி இன்னும் பக்குவம் இல்லாத தலைவராகத்தான் உள்ளார்' என்று கூறியது சர்ச்சைக்கான முதல் புள்ளி. அடுத்து சிவசேனா தன் பங்கிற்கு விமர்சனங்களை முன்வைத்துள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் எதிர்காலம், தலைமை குறித்து தனது கட்சி பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில் விமர்சனமாக சிவசேனா தீட்ட, காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் கோபம் தொற்றிக்கொண்டது. இதோடு நில்லாமல் காங்கிரஸ் இப்போது பலவீனமாக இருப்பதால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அடுத்த தலைவராக சரத் பவார் வந்தால் நாங்கள் வரவேற்போம் என்று சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கொளுத்திப் போட்டார் .
மறுபுறம், மும்பை பிவண்டி மாநகராட்சியை சேர்ந்த 18 காங்கிரஸ் கவுன்சிலர்களை தேசியவாத காங்கிரஸ் தங்களது கட்சியில் இணைத்துக் கொண்டது. இப்படி சிவசேனாவும், தேசியவாத காங்கிரஸும் இணைத்துக்கொண்டு 'கேப்' கிடைக்கும்போதெல்லாம் காங்கிரஸை சிறுமைப்படுத்தி பேசிவந்தது. இந்த செயல்களால் காங்கிரஸ் கடும் அதிருப்தியில் உள்ளது. இந்த அதிருப்தியை கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த காங்கிரஸ் நிறுவன நாள் விழாவில் வெளிப்படையாக காண முடிந்தது.
காங்கிரஸ் மேலிட தலைமை இதுதொடர்பாக எந்தவித ரியாக்ஷனும் எழுப்பாத நிலையில், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான நசீம் கான், ``மாநில ஆட்சியில்தான் தங்களுடன் சிவசேனா கூட்டணி வைத்துள்ளது. இதற்காக குறைந்தபட்ச செயல் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. அதன்படி அரசும், கட்சிகளும் நடைபெற வேண்டும். கூட்டணி கட்சிகள் வலுப்பட வேண்டுமே தவிர, ஒரு கட்சி மற்றொரு கட்சியை பலவீனப்படுத்தக்கூடாது" என்று சிவசேனா, தேசியவாத காங்கிரஸை குறிவைத்து பேசினார்.
மேலும், `எங்கள் கட்சி தலைமையை விமர்சனம் செய்ய சிவசேனா பத்திரிகை சாம்னாவுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட்டணி அரசு தொடர்ந்து நீடிப்பது காங்கிரஸ் கையில் மட்டும் அல்ல. இதை மற்ற கூட்டணி கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும். காங்கிரஸ் தலைமையை பற்றி விமர்சிக்கும் பிரச்னையை நாங்கள் 3 கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எழுப்புவோம்" என்று கோபத்தில் கொதித்துவிட்டார்.
இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள மும்பை மாநகராட்சித் தேர்தல் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் மற்ற தேர்தல்களில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஒன்றிணைந்து போட்டியிடும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் அறிவித்தார்.
இதுதொடர்பாக பேசிய நசீம் கான், ``2022 மும்பை மாநகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 227 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும். எங்கள் கட்சி எத்தனை இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதை சிவசேனா தீர்மானிக்க முடியாது. மாநகராட்சி தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிட்டு, எங்கள் மேயரை பதவி ஏற்க செய்வோம்" என்று அதிரடியாக அறிவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவரின் இந்த பேச்சு மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மலையரசு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3pHhdP7மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி செய்து வருகிறது. இந்தக் கூட்டணி கலையும் என பாஜக தெரிவித்தாலும், வெற்றிகரமாக 2-வது ஆண்டை அடி எடுத்து வைத்துள்ளது இந்தக் கூட்டணி. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் திடீர் அதிருப்தியை வெளிப்படுத்திருப்பது கூட்டணியில் தற்போது விரிசல் விழும் நிலைக்கு சென்றுள்ளது.
என்ன நடந்தது?!
சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் கட்சி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் செயல்பாடுகள் குறித்து பேசினார். அப்போது `ராகுல்காந்தி இன்னும் பக்குவம் இல்லாத தலைவராகத்தான் உள்ளார்' என்று கூறியது சர்ச்சைக்கான முதல் புள்ளி. அடுத்து சிவசேனா தன் பங்கிற்கு விமர்சனங்களை முன்வைத்துள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் எதிர்காலம், தலைமை குறித்து தனது கட்சி பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில் விமர்சனமாக சிவசேனா தீட்ட, காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் கோபம் தொற்றிக்கொண்டது. இதோடு நில்லாமல் காங்கிரஸ் இப்போது பலவீனமாக இருப்பதால், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அடுத்த தலைவராக சரத் பவார் வந்தால் நாங்கள் வரவேற்போம் என்று சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கொளுத்திப் போட்டார் .
மறுபுறம், மும்பை பிவண்டி மாநகராட்சியை சேர்ந்த 18 காங்கிரஸ் கவுன்சிலர்களை தேசியவாத காங்கிரஸ் தங்களது கட்சியில் இணைத்துக் கொண்டது. இப்படி சிவசேனாவும், தேசியவாத காங்கிரஸும் இணைத்துக்கொண்டு 'கேப்' கிடைக்கும்போதெல்லாம் காங்கிரஸை சிறுமைப்படுத்தி பேசிவந்தது. இந்த செயல்களால் காங்கிரஸ் கடும் அதிருப்தியில் உள்ளது. இந்த அதிருப்தியை கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த காங்கிரஸ் நிறுவன நாள் விழாவில் வெளிப்படையாக காண முடிந்தது.
காங்கிரஸ் மேலிட தலைமை இதுதொடர்பாக எந்தவித ரியாக்ஷனும் எழுப்பாத நிலையில், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான நசீம் கான், ``மாநில ஆட்சியில்தான் தங்களுடன் சிவசேனா கூட்டணி வைத்துள்ளது. இதற்காக குறைந்தபட்ச செயல் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. அதன்படி அரசும், கட்சிகளும் நடைபெற வேண்டும். கூட்டணி கட்சிகள் வலுப்பட வேண்டுமே தவிர, ஒரு கட்சி மற்றொரு கட்சியை பலவீனப்படுத்தக்கூடாது" என்று சிவசேனா, தேசியவாத காங்கிரஸை குறிவைத்து பேசினார்.
மேலும், `எங்கள் கட்சி தலைமையை விமர்சனம் செய்ய சிவசேனா பத்திரிகை சாம்னாவுக்கு அதிகாரம் கொடுத்தது யார்? மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட்டணி அரசு தொடர்ந்து நீடிப்பது காங்கிரஸ் கையில் மட்டும் அல்ல. இதை மற்ற கூட்டணி கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும். காங்கிரஸ் தலைமையை பற்றி விமர்சிக்கும் பிரச்னையை நாங்கள் 3 கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எழுப்புவோம்" என்று கோபத்தில் கொதித்துவிட்டார்.
இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள மும்பை மாநகராட்சித் தேர்தல் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் மற்ற தேர்தல்களில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஒன்றிணைந்து போட்டியிடும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் அறிவித்தார்.
இதுதொடர்பாக பேசிய நசீம் கான், ``2022 மும்பை மாநகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 227 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும். எங்கள் கட்சி எத்தனை இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதை சிவசேனா தீர்மானிக்க முடியாது. மாநகராட்சி தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிட்டு, எங்கள் மேயரை பதவி ஏற்க செய்வோம்" என்று அதிரடியாக அறிவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவரின் இந்த பேச்சு மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மலையரசு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்