சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை தொடர்பான வழக்கில், யாரையோ காப்பாற்றவே ஹேம்நாத்தை அவசர அவசரமாக காவல்துறையினர் கைது செய்துள்ளதாக ஹேம்நாத்தின் பெற்றோர் கூறினர்.
சின்னத்திரை மூலம் பிரபலமான நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், திருமணம் முடிந்து ஓராண்டுகூட நிறைவடையவில்லை என்பதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி, ஸ்ரீபெரும்புதூர் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ விசாரணை நடத்தினார். சித்ராவின் தாய் மற்றும் தந்தையிடம் முதற்கட்ட விசாரணை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அன்றைய தினமே இரவில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார்.
இந்த சூழலில் ஹேம்நாத்தின் தாய் வசந்தா, தந்தை ரவிச்சந்திரன் ஆகியோர் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ முன்பு விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது அவர்களிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரவிச்சந்திரன், “சித்ராவிடம் அவரது பணி தொடர்பாகவோ அல்லது வரதட்சணையாக பணம், நகையோ கேட்கவில்லை. இந்த வழக்கில் யாரையோ காப்பாற்றவே ஹேம்நாத்தை அவசர அவசரமாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்”என்றார்.
இதனிடையே, ஹேம்நாத் கைதானதால் அவர் ஆர்டிஓ விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் வருவாய் கோட்டாட்சியர் பொன்னேரி சிறைத்துறைக்கு கடிதம் எழுதினார். அதில், வியாழக்கிழமை ஹேம்நாத்தை விசாரணைக்கு ஆஜர்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். இதனால் அடுத்தகட்ட விசாரணையின்போது ஹேம்நாத் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது சித்ரா தற்கொலை வழக்கில் மேலும் பல விஷயங்கள் வெளிவரும் எனத் தெரிகிறது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்