Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

’’பணத்தைப் பற்றி கவலைப்படவில்லை; திறமையை நம்பினேன்’’ - நடராஜன் குறித்து பேசிய சேவாக்!

2017 ஆம் ஆண்டு ஐபிஎல்  ஏலத்தில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தமிழகத்தை சேர்ந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் டி. நடராஜன், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் ரூபாய் 3 கோடிக்கு வாங்கப்பட்டார். இது குறித்த சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார் வீரேந்திர சேவாக்.

image

நடராஜன் புதன்கிழமை கான்பெர்ராவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான  3 வது ஒருநாள் போட்டியில் முதன்முதலாக அறிமுகமானார். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்ட நடராஜன் 10 ஓவர்களில் 70 ரன்களைக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார். இவரது பந்துவீச்சு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

நடராஜனை 2017 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் 3 கோடி ரூபாய்க்கு அதிரடியாக ஏலம் எடுத்த வீரேந்திர சேவாக் இதுபற்றி கூறும்போது “ நான் அப்போது பணத்தைப் பற்றி கவலைப்படவில்லை, அவரிடம் திறமை இருக்கிறது என நம்பினேன். எங்கள் அணியில் ஒரு சில தமிழக வீரர்கள் இருந்தார்கள், அவர்கள் நடராஜன் ஸ்லாக் ஓவர்களில் மிகச் சிறப்பாக  யார்க்கர் பந்து வீசும் ஒரு நல்ல வீரர் என்று என்னிடம் கூறினார்கள்.

நான் அவரது வீடியோக்களைப் பார்த்தேன், பின்னர் நாங்கள்  அவரை  நிச்சயமாக ஏலத்தில் எடுக்கலாம் என்று முடிவு செய்தோம். துரதிர்ஷ்டவசமாக அந்த ஆண்டு, அவருக்கு முழங்கை மற்றும் முழங்காலில் காயம் ஏற்பட்டது, இதனால் அவரால் அதிக போட்டிகளில் விளையாட முடியவில்லை. ஆனால் அவர் விளையாடிய போட்டிகளில் மட்டுமே நாங்கள் வென்றோம், மற்ற எல்லா போட்டிகளிலும் தோற்றோம், ”என்று சேவாக் கூறியுள்ளார்.

image

மேலும் “தற்போது அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைப்பதைக் கண்டு நான் மிகவும் உற்சாகமடைந்தேன். அவருக்கு டி20 போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்படும் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால் அவர் ஒருநாள் போட்டிகளில் விளையாடியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  நடராஜனுக்கு ஆல் தி பெஸ்ட். அவர் இப்போதிலிருந்து தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியில் இடம் பெறுவார் என்று நம்புகிறேன், ”என்று  சேவாக்  கூறினார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/36AGPGC

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்