இன்றைய தினத்தின் சில முக்கியச் செய்திகள்...
- சென்னை புறநகர் ரயில்களில் கூட்ட நெரிசலற்ற நேரத்தில் பயணிக்க இன்று முதல் அனைவருக்கும் அனுமதி. காலை 7 முதல் 9.30 மணி வரையும், மாலை 4.30 முதல் இரவு 7 மணி வரையும் அனுமதி இல்லை.
- பிரிட்டனில் இருந்து திரும்பிய தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 20 பேருக்கு கொரோனா. உருமாறிய வீரியமுள்ள கொரோனாவா என பரிசோதனை.
- உருமாறிய கொரோனாவை இந்தியாவில் தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு. பிரிட்டனில் இருந்து நவம்பர் 25ஆம் தேதிக்குப் பிறகு வந்தவர்களை தொடர்பு கொண்டு கண்காணிக்க முடிவு.
- பல்வேறு நாடுகளில் இருந்து பிரிட்டன் வழியாக தமிழகம் வந்த 1088 பேர் கண்காணிப்பு. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதிய தலைமுறைக்கு தகவல்.
- பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 2500 ரொக்கம் பெற, வருகிற 26 முதல் 30 வரை டோக்கன் விநியோகம். குறிப்பிட்ட நாளில் பெற இயலாதவர்கள் 13ஆம் தேதிக்குள் பரிசைப் பெறலாம் என்றும் அறிவிப்பு.
- தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு வசதி. திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
- ஒரு வாக்குச்சாவடியில் ஆயிரம் பேருக்கு மேல் இல்லாதவாறு கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். தலைமைத் தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்கா பேட்டி.
- மதத்தின் காரணமாக யாருக்கும் வளர்ச்சி மறுக்கப்படாது. அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு.
- சேலத்தில் பிணையில் வெளியே வந்த ரவுடி வெட்டிக்கொலை. திரைப்படப் பாணியில் கார்களை மோதவிட்டு அரிவாளால் வெட்டிச் சாய்த்த கும்பல்.
- புதுச்சேரியில் கடற்கரை, சொகுசு விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி. முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.
- அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து டெல்லியில் போராடும் விவசாயிகள் இன்று முடிவு. நல்ல தீர்வு கிடைக்கும் என மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நம்பிக்கை
- நாட்டையே அதிரவைத்த கேரள கன்னியாஸ்திரி கொலைவழக்கில் பாதிரியார் குற்றவாளி என தீர்ப்பு. 28 ஆண்டுகள் நடந்த வழக்கில் தண்டனை விவரங்களை இன்று அறிவிக்கிறது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/34DOUZMஇன்றைய தினத்தின் சில முக்கியச் செய்திகள்...

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்