Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

’திருமண நாள் பரிசாக நிலவில் நிலம்’ - மனைவிக்கு இன்ப அதிர்ச்சி அளித்த கணவர்!

https://ift.tt/2KZ444E

தன் மனைவிக்காக நிலவில் வாங்கியுள்ள 3 ஏக்கர் நிலத்தை திருமணப் பரிசாக அளித்துள்ளார் தர்மேந்திரா.

‘நிலவிடம் வாடகை வாங்கி விழி வீட்டினில் குடி வைக்கலாமா?’ என்ற பாடல் வரிகள் நமக்கு நினைவிருக்கலாம். ஆனால் வெறும் பாடலாக மட்டுமே கடந்துவிடமால் அதை சாத்தியப்படுத்தியும் இருக்கிறார், ராஜஸ்தான் மாநிலம்  அஜ்மீரை சேர்ந்த தர்மேந்திரா அனிஜா.

பிரேசிலில் வசித்துவரும் இவர் தனது மனைவியான சப்னா அனிஜாவுக்கு  எட்டாம் ஆண்டு திருமண நாள் பரிசு வழங்குவதற்காக நிலாவில் 3 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். தர்மேந்திரா தமது மனைவி சப்னாவுக்கு திருமண நாள் கேக் வெட்டியதும் மணநாள் பரிசாக நிலாவில் நிலம் வாங்கிய பதிவு சான்றிதழை கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்தார்.  

நிலவில் வசிப்பதற்கான குடியுரிமையுடன் நிலம் வாங்கியதற்கான சான்றிதழை நியூயார்க்கில் உள்ள அமெரிக்க லூனர் சொசைட்டி என்ற நிறுவனம் விற்றுள்ளது.

மறைந்த நடிகர், சுஷாந்த் சிங் ராஜ்புட், ஷாருக்கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும், டாம் குரூஸ் போன்ற ஹாலிவுட் நட்சத்திரங்களும், நிலவில் இடம் வாங்கி போட்டுள்ளனர். பீஹாரைச் சேர்ந்த தொழிலதிபர் நீரஜ் குமார், நிலவில் ஒரு ஏக்கர் நிலத்தை 45 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்