அமெரிக்க அதிபர் தேர்தல் முறைகேடு தொடர்பான தனது போராட்டம் இன்னும் முடிந்துவிடவில்லை என டொனால்டு ட்ரம்ப் உறுதிபட தெரிவித்துள்ளார்.
ஃபாக்ஸ் ந்யூஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர் தேர்தல் முறைகேடு தொடர்பான தனது சில வழக்குகளை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டபோதிலும் மற்ற சில சவால்களை முன்னெடுக்கப்போவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பைடனின் தேர்தல் வெற்றி குறித்த சான்றிதழ் இன்று வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ட்ரம்ப்பின் இக்கருத்து வெளியாகியுள்ளது.

அதிபர் தேர்தலில் பைடன் முறைகேடு செய்து வெற்றிபெற்றுவிட்டதாக கூறி வரும் ட்ரம்ப், தான் தோல்வி அடைந்து விட்டதாக இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் முறைகேடான வழியில் ஒருவர் அமெரிக்க அதிபர் ஆக இருப்பது கவலை தருவதாகவும் ட்ரம்ப் தன் தொலைக்காட்சி பேட்டியில் கவலை தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/347FcOW

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்