மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். மத்திய அரசுடன் 5 கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து 13 வது நாளாக போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்திற்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்த லைவ் அப்டேட்ஸ் இங்கு காணலாம்...
நாடு முழுவதும் இன்று பந்த்! எப்படி காட்சியளிக்கிறது சென்னை தி.நகர்?
2020 டிச.08, நேரம் 10.39 AM: வேளாண் சட்டங்களுக்கு எதிராக மயிலாடுதுறையில் 10,000க்கும் அதிகமான கடைகள் அடைப்பு!
2020 டிச.08, நேரம் 10.38 AM: கடலூர் மாவட்டத்தில் 8 இடங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடலூரில் போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர். புயல் பாதித்த இடங்களை பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கடலூர் செல்ல உள்ள நிலையில் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
2020 டிச.08, நேரம் 10.22 AM: புதுச்சேரியில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், அங்கு நடைபெறும் போராட்ட களத்திற்கு நேரில் வந்த புதுச்சேரி முதல்வர், போராட்டத்தை அமைதியான முறையில் மக்களுக்கு இடையூறு இல்லாமல் நடத்துமாறு அறிவுறுத்தினார்.
2020 டிச.08, நேரம் 10.12 AM:புதுச்சேரியில் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
டிச.08, 10.00 AM: திருவாரூர்: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருத்துறைப்பூண்டியில் 2,000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளான விளக்குடி, முத்துப்பேட்டை, கட்டிமேடு, ஆலத்தம்பாடி, மணலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
டிச.08, 09.32 AM: மகாராஷ்டிரா மாநிலம் பல்தானா அருகே மல்காபூரில் ரயிலை நிறுத்தி அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர். ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
டிச.08, 09.22 AM: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் போராட்டம் நடக்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் கடைகளை அடைத்து விவசாயிகளுக்கு வியாபாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். திருவாரூர்- நாகை- புதுக்கோட்டை இடையே சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
டிச.08, 09.00 AM: புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் இன்று காலை முதல் ஆட்டோக்கள், பேருந்துகள், இயங்கவில்லை. புதுச்சேரியில் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. மேலும், டீக்கடைகள், உணவு விடுதிகள் அடைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி முழுவதும் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/33V0ZJLமத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். மத்திய அரசுடன் 5 கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து 13 வது நாளாக போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்திற்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்த லைவ் அப்டேட்ஸ் இங்கு காணலாம்...
நாடு முழுவதும் இன்று பந்த்! எப்படி காட்சியளிக்கிறது சென்னை தி.நகர்?
2020 டிச.08, நேரம் 10.39 AM: வேளாண் சட்டங்களுக்கு எதிராக மயிலாடுதுறையில் 10,000க்கும் அதிகமான கடைகள் அடைப்பு!
2020 டிச.08, நேரம் 10.38 AM: கடலூர் மாவட்டத்தில் 8 இடங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடலூரில் போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர். புயல் பாதித்த இடங்களை பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கடலூர் செல்ல உள்ள நிலையில் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
2020 டிச.08, நேரம் 10.22 AM: புதுச்சேரியில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், அங்கு நடைபெறும் போராட்ட களத்திற்கு நேரில் வந்த புதுச்சேரி முதல்வர், போராட்டத்தை அமைதியான முறையில் மக்களுக்கு இடையூறு இல்லாமல் நடத்துமாறு அறிவுறுத்தினார்.
2020 டிச.08, நேரம் 10.12 AM:புதுச்சேரியில் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
டிச.08, 10.00 AM: திருவாரூர்: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருத்துறைப்பூண்டியில் 2,000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளான விளக்குடி, முத்துப்பேட்டை, கட்டிமேடு, ஆலத்தம்பாடி, மணலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
டிச.08, 09.32 AM: மகாராஷ்டிரா மாநிலம் பல்தானா அருகே மல்காபூரில் ரயிலை நிறுத்தி அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர். ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
டிச.08, 09.22 AM: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் போராட்டம் நடக்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் கடைகளை அடைத்து விவசாயிகளுக்கு வியாபாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். திருவாரூர்- நாகை- புதுக்கோட்டை இடையே சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
டிச.08, 09.00 AM: புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் இன்று காலை முதல் ஆட்டோக்கள், பேருந்துகள், இயங்கவில்லை. புதுச்சேரியில் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. மேலும், டீக்கடைகள், உணவு விடுதிகள் அடைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி முழுவதும் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்