Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

Bharat Bandh Live Updates: விவசாயிகளுக்கு ஆதரவாக மகாராஷ்டிராவில் ரயில் மறியல் போராட்டம்!

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். மத்திய அரசுடன் 5 கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து 13 வது நாளாக போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்திற்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்த லைவ் அப்டேட்ஸ் இங்கு காணலாம்...

டிச.08, 10.00 AM: திருவாரூர்: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திருத்துறைப்பூண்டியில் 2,000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளான விளக்குடி, முத்துப்பேட்டை, கட்டிமேடு, ஆலத்தம்பாடி, மணலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

டிச.08, 09.32 AM: மகாராஷ்டிரா மாநிலம் பல்தானா அருகே மல்காபூரில் ரயிலை நிறுத்தி அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர். ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். 

image

டிச.08, 09.22 AM: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் போராட்டம் நடக்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் கடைகளை அடைத்து விவசாயிகளுக்கு வியாபாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். திருவாரூர்- நாகை- புதுக்கோட்டை இடையே சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

டிச.08, 09.00 AM: புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் இன்று காலை முதல் ஆட்டோக்கள், பேருந்துகள், இயங்கவில்லை. புதுச்சேரியில் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. மேலும், டீக்கடைகள், உணவு விடுதிகள் அடைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி முழுவதும் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/33V0ZJL

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்