Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

“தமிழகஅமைச்சரவை மீது 97 பக்க ஊழல் புகார் கொடுத்துள்ளோம்” - ஆளுநரை சந்தித்த ஸ்டாலின் பேட்டி

https://ift.tt/2WEuBXA

தமிழக அமைச்சரவை மீது 97 பக்க ஊழல் புகார் பட்டியலை ஆளுநரிடம் அளித்துள்ளோம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அவருடன் துரைமுருகன், டி.ஆர். பாலு, ஆ. இராசா, ஆலந்தூர் பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்ட திமுக தலைவர்கள் உடன் சென்றனர். அப்போது முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை மீது 97 பக்க ஊழல் புகார்கள் அடங்கிய மனுவை ஆளுநரிடம் அளித்தனர்.

அந்த ஊழல் புகார் பட்டியல் மனுவின் சுருக்கம்;

1.முதலமைச்சர் பழனிச்சாமி மீது தனது நெருங்கிய உறவினர்களுக்கு 6133.57 கோடி ரூபாய் மதிப்பிலான 6 நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை கொடுத்தது; கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசு கூடுதலாக வழங்கிய இலவச அரிசியை வெளி மார்க்கெட்டில் விற்று முறைகேடாக பணம் சம்பாதித்து அரசுக்கு 450 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியது; முதற்கட்டமாக 200.21 கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக தனது உறவினர்கள் மற்றும் பினாமிகள் பெயரில் 19 சொத்துக்களை வாங்கி குவித்தது குறித்து ஊழல் புகார்.

2. துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீது “காக்னிஷன்ட்” கம்பெனி கட்டுமான அனுமதி ஊழல் உள்ளிட்ட வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த ஊழல் புகார்.

image

3. உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது 9 பினாமி கம்பெனிகளை வைத்து- அதிக விலைக்கு கிராம ஊராட்சி மன்றங்களுக்கு எல்.இ.டி விளக்கு கொள்முதல் செய்து 875 கோடி ஊழல் புகார்.

4. மின்வாரியத்துறை அமைச்சர் பி. தங்கமணி மீது நிலக்கரி இறக்குமதி , தரமற்ற நிலக்கரி வாங்கியது, போலி மின்சாரக் கணக்கில் ஊழல் உள்ளிட்ட 950.26 கோடி ரூபாய் ஊழல் புகார்.

5. உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிய இலவச அரிசி மற்றும் வாங்கிய அரிசியை வெளிமார்க்கெட்டில் விற்று முறைகேடாக பணம் சம்பாதித்தது குறித்த ஊழல் புகார்.

6. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மீது அரசு அதிகாரிகள் மாறுதல்கள் மற்றும் நியமனங்களுக்காக 20.75 கோடி ரூபாய் லஞ்சம் பெற்று வைத்திருந்த கவர்கள் வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்டது; புதுக்கோட்டையில் கல் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக கல் வெட்டியெடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி ஊழல் செய்தது உள்ளிட்ட ஊழல் புகார்கள்.

image

7. வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மீது 1950 கோடி ரூபாய் பாரத் நெட் டெண்டர் ஊழல் புகார்.

8. மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் மீது மீனவர்களுக்கு வாக்கி டாக்கி கொள்முதல் செய்ததில் 30 கோடி ரூபாய் ஊழல்.

ஆளுநர் உடனான சந்திப்பையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், “முதற்கட்டமாக முதலமைச்சர் பழனிச்சாமி மீதான வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளிட்ட எட்டு அமைச்சர்கள் மீது தற்போது ஊழல் புகார் பட்டியல் தமிழக ஆளுநrஇடம் கொடுத்து, 2018 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுத்து, மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டிடுமாறு வலியுறுத்தியிருப்பட்டிருக்கிறது.

மேலும், தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் நிலவுகிறது; அமைச்சர்கள் மீது அளித்த ஊழல் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் ஆளுநரிடம் மனுவாக அளித்தோம்” எனத் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்