தமிழகத்தை தலைமையிடமாக கொண்ட செட்டிநாடு குழும நிறுவனங்களில் கணக்கில் வராத ரூ.23 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
செட்டிநாடு குழுமம் என்பது சிமெண்ட் உற்பத்தி நிறுவனம், மின் உற்பத்தி நிறுவனம், நிலக்கரி நிறுவனம், மருத்துவ பல்கலைக் கழகம், பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள், போக்குவரத்து, செக்யூரிட்டி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் ஒரு குழுமம். அந்த செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான சென்னை, திருச்சி, கோவை மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, மும்பையில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்ட செட்டிநாடு குழும நிறுவனங்களில் கணக்கில் வராத ரூ.23 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. மேலும், செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமாக வெளிநாடுகளில் ரூ.110 கோடிக்கு சொத்துக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ரூ. 700 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்