டெல்லி எல்லையில் 60,000-க்கும் அதிகமானோர் குவிந்திருப்பதால், இதற்கு மேல் நிலைமையை சமாளிக்க முடியாது என்று ஹரியானா போலீஸ் தெரிவித்துள்ளது.
நாளுக்கு நாள் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து டெல்லி எல்லையில் மக்கள் குவிந்து வருகின்றனர். இதனால் டெல்லியே ஸ்தம்பித்துள்ளது. இதுகுறித்து ஹரியானா காவல்துறையின் மூத்த அதிகாரிகள் கூறுகையில், "நிலைமையை சமாளிக்க முடியாத நிலை நிலவுகிறது. டெல்லி எல்லைக்கு மக்களை அழைத்துச்செல்ல முடியாது. 60,000 க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் எல்லைகளில் முகாமிட்டுள்ளனர்” என்றார்.
இதுகுறித்து ஹரியான டிஜிபி மனோஜ் யாதவா கூறுகையில், “எல்லைகளை சீல் வைக்க வேண்டுமானால், அதை நாங்கள் செய்வதற்கான ஏற்பாடுகளை தயார் நிலையில் உள்ளன. இப்போதைக்கு, பயணிகளின் சிரமத்தைத் தவிர்ப்பதற்காக எல்லைகள் சீல் வைக்கப்படவில்லை. டெல்லி-அம்பாலா மற்றும் டெல்லி-ஹிசார் ஆகிய இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் தடுக்கப்பட்டுள்ளன, டெல்லிக்குள் நுழைய விரும்பும் எவரும் கிராமங்கள் வழியாக இணைப்பு சாலைகள் வழியாக பல கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேலும் ஒரு அதிகாரி கூறுகையில், “நாங்கள் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் தொடர்பில் உள்ளோம். டெல்லி பார்டரில் அதிக பேரை குவிக்க வேண்டாம் என அவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளோம். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவது போன்று தோன்றினால் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதை தடுக்க முற்படுவோம். நிறைய பேரை எல்லைக்கு அனுப்ப வேண்டாம் என்று பஞ்சாப் அரசிடம் கேட்டுக்கொண்டோம். நிலைமையை கட்டுக்குள் வைக்க முடியாத நிலை உருவாகி வருகிறது. வெவ்வேறு நோய்களால் 30-40 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், டெல்லியில் முக்கிய நுழைவு வாயில்களை கைப்பற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர். 20 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், கடந்த 8ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். அதேபோல இரண்டு தினங்களுக்கு முன்பு டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி மையங்களையும் அவர்கள் கைப்பற்றினர். இதன் தொடர்ச்சியாக, விவசாயிகளின் போராட்டம் முக்கியமாக நடைபெற்றுவரும் இடங்களான சிங்கு எல்லை, காஜிப்பூர் எல்லை, நொய்டா எல்லை என பல பகுதிகளில் உண்ணாவிரத போராட்டத்தையும் முன்னெடுத்தனர்.
இதனிடையே பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகங்கள் முற்றுகை இடப்படும் என விவசாய சங்கங்கள் அறிவித்திருந்த நிலையில் டெல்லியில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகம் உட்பட முக்கியமான இடங்களில் காவல்துறை பாதுகாப்பு அதிகமாக போடப்பட்டிருந்தது. உண்ணாவிரத போராட்டம் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடத்தி முடித்ததை அடுத்து அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3ny29mlடெல்லி எல்லையில் 60,000-க்கும் அதிகமானோர் குவிந்திருப்பதால், இதற்கு மேல் நிலைமையை சமாளிக்க முடியாது என்று ஹரியானா போலீஸ் தெரிவித்துள்ளது.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்