இந்தியாவை சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு பயணச்சீட்டு தொகையில் 50% வீதம் சலுகையை அறிவித்துள்ளது ஏர் இந்தியா நிறுவனம்.
ஏர் இந்தியா விமானம், மூத்த குடிமக்களுக்கு அடிப்படை கட்டணத்தில் 50% சலுகையை வழங்கும் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. மேலும், இந்தத் திட்டம் உள்நாட்டு விமானங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்தச் சலுகையைப் பெற தகுதியுடையவர்கள் என்றும் அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தின்படி, இந்திய தேசியத்தைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கும், இந்தியாவில் நிரந்தரமாக வசித்து வருபவர்களுக்கும் மட்டுமே இந்தச் சலுகை என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது.
ஏர் இந்தியா சலுகையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, எகனாமி கேபினில் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்பதிவு வகுப்புகளுக்கான அடிப்படை கட்டணம் மீது 50% சலுகை கிடைக்கிறது. சலுகைப்பெற விரும்புவோர் பயணத்தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் டிக்கெட்டுகள் வாங்க வேண்டும். முன்பதிவு செய்யும் போது, பிறந்த தேதியுடன் கூடிய புகைப்பட அடையாள அட்டை (வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஏர் இந்தியா வழங்கிய மூத்த குடிமக்கள் அடையாள அட்டை) போன்றவற்றை டிக்கெட் முன்பதிவு செய்யும் போது சலுகையைப் பெறுவதற்கு வழங்க வேண்டும்.
அதேபோல சம்பந்தப்பட்ட அடையாள அட்டை அல்லது ஆவணங்கள் செக்-இன் நேரத்தில் அல்லது போர்டிங் கேட்டில் காண்பிக்கப்படாவிட்டால், அடிப்படைக் கட்டணம் பறிமுதல் செய்யப்படும் மற்றும் டிக்கெட் தொகை திருப்பி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3mnBxD7இந்தியாவை சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு பயணச்சீட்டு தொகையில் 50% வீதம் சலுகையை அறிவித்துள்ளது ஏர் இந்தியா நிறுவனம்.
ஏர் இந்தியா விமானம், மூத்த குடிமக்களுக்கு அடிப்படை கட்டணத்தில் 50% சலுகையை வழங்கும் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. மேலும், இந்தத் திட்டம் உள்நாட்டு விமானங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்தச் சலுகையைப் பெற தகுதியுடையவர்கள் என்றும் அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தின்படி, இந்திய தேசியத்தைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கும், இந்தியாவில் நிரந்தரமாக வசித்து வருபவர்களுக்கும் மட்டுமே இந்தச் சலுகை என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது.
ஏர் இந்தியா சலுகையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, எகனாமி கேபினில் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்பதிவு வகுப்புகளுக்கான அடிப்படை கட்டணம் மீது 50% சலுகை கிடைக்கிறது. சலுகைப்பெற விரும்புவோர் பயணத்தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் டிக்கெட்டுகள் வாங்க வேண்டும். முன்பதிவு செய்யும் போது, பிறந்த தேதியுடன் கூடிய புகைப்பட அடையாள அட்டை (வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஏர் இந்தியா வழங்கிய மூத்த குடிமக்கள் அடையாள அட்டை) போன்றவற்றை டிக்கெட் முன்பதிவு செய்யும் போது சலுகையைப் பெறுவதற்கு வழங்க வேண்டும்.
அதேபோல சம்பந்தப்பட்ட அடையாள அட்டை அல்லது ஆவணங்கள் செக்-இன் நேரத்தில் அல்லது போர்டிங் கேட்டில் காண்பிக்கப்படாவிட்டால், அடிப்படைக் கட்டணம் பறிமுதல் செய்யப்படும் மற்றும் டிக்கெட் தொகை திருப்பி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்