Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

பிரசாத் ஸ்டூடியோ விவகாரம் - ரூ.50 லட்சம் இழப்பீடு கோரி இளையராஜா வழக்கு

https://ift.tt/3gEZnsx

சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டூடியோவிலிருந்து தன்னை வெளியேற்றியதற்காக 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சாலிகிராமத்திலுள்ள பிரசாத் ஸ்டூடியோவில், கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்த தன்னை வெறியேற்றிவிட்டதாக இசையமைப்பாளர் இளையராஜா தனது மனுவில் தெரிவித்துள்ளார். இதனால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க, ஸ்டூடியோ உரிமையாளர்கள் சாய் பிரசாத் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு உத்தரவிடக் கோரி இளையராஜா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

image

அந்த மனுவில், ஸ்டூடியோவிலிருந்த, தனக்குச் சொந்தமான பொருட்களை எடுத்துச் செல்லவும் அனுமதிக்காமல் தன்னை வெளியேற்றியது நியாயமற்றது எனவும், தன் வசமுள்ள ஒலிப்பதிவு அரங்கில் தலையிட பிரசாத் ஸ்டூடியோவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், மனு தொடர்பாக டிசம்பர் 17ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்