Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

'45 தொகுதிகளில் வாக்கு வங்கி'- மம்தா, பாஜக குறி... அதிகம் அறியப்படாத சமூகத்தின் பின்புலம்!

https://ift.tt/2WREUI4

வைஷன்வைட் (வைணவம்) இந்துக்களின் ஒரு பிரிவு மாதுவாக்கள். இந்த சமூகம் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஹரிச்சந்த் தாகூர் என்பவரால் நிறுவப்பட்டது. அவர் நமோசூத்ரா குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்தச் சமூகத்தினர் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கப்பட்ட வரலாறு உண்டு. ஸ்ரீ சைதன்யா மஹாபிரபுவின் சீடரான தாகூர், ஃபரித்பூரில் (இப்போது வங்கதேசத்தில்) ஒரு சீர்திருத்தவாத இயக்கத்தைத் தொடங்கினார். இச்சமூக மக்கள் தாகூரை கிருஷ்ணரின் அவதாரமாக வணங்குகிறார்கள். ஹரிச்சந்த் தாகூரின் பேரனின் மனைவியாக இருந்த பீனபணி தேவி, மாதுவா மேட்ரிச்சார் மற்றும் பிரிவுத் தலைவராகக் கருதப்படுகிறார்.

மாதுவாக்கள் தங்கள் இரண்டாவது அமைப்பையும் கோயிலையும் பிரிவினைக்குப் பிறகு இந்தோ-பங்களாதேஷ் எல்லைக்கு அருகிலுள்ள போங்கானில் நிறுவினர். இப்பகுதி தாகூர் நகர் என்று அழைக்கப்படுகிறது. இப்போது இந்தப் பகுதி, மாதுவா மகா சங்கத்தின் தலைமையகமாக கருதப்படுகிறது. இந்துக்களிடையே ஒரு சிறுபான்மைக் குழுவான மாதுவாக்கள், பிரிவினைக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் குடியேறினர்.

image

மேற்கு வங்க மாநிலத்தில் மாதுவா மக்கள் தொகை சுமார் 2 கோடி (சுமார் 30 சதவீதம்) எனக் கூறப்படுகிறது, இருப்பினும் மாநில அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் அரசின் கூற்றுப்படி இந்த மக்கள் 20 சதவீதம் உள்ளதாக கூறப்படுகிறது. வடக்கு 24 பர்கானாக்கள், நதியா, முர்ஷிதாபாத் மற்றும் தினாஜ்பூர் (வடக்கு மற்றும் தெற்கு) உட்பட நான்கு முதல் ஐந்து மாவட்டங்களில் இந்த சமூகம் பரவியுள்ளது.

வரப்போகும் சட்டமன்றத் தேர்தலை முன்வைத்து மேற்கு வங்கத்தில் பல்வேறு செயல்கள் நடந்து வருகின்றன. அதன்படி, இந்த சமூக மக்களை கவரும் நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக பாஜக - திரிணாமுல் இடையே இம்மக்களை கவர ஒரு போர் நிலவி வருகிறது. பிரிவினையின்போது அகதிகளாக மாநிலத்திற்கு வந்த மாதுவாக்கள், தற்போது 40-ல் இருந்து 45 வரையிலான சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கிறார்கள் என்பதால்தான் கரிசனம் காட்டி வருகிறன்றனர். முதல்வர் மம்தா பானர்ஜி இம்மக்களின் ஸ்தாபக ஆன்மிகத் தலைவர்களை அங்கீகரிப்பதன் மூலம் சமூகத்தை கவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், பாஜகவின் அமித் ஷா ஜனவரி மாதம் மாநிலத்திற்குச் செல்லும்போது சமூக உறுப்பினர்களைச் சந்திக்க உள்ளார். இந்தச் சந்திப்பானது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்பு வந்தபோது இந்த சமூகத்தின் தலைவர்களை சந்தித்தார் அமித் ஷா.

image

தேர்தல் முக்கியத்துவத்தை தவிர, பல ஆண்டுகளாக மாநில அரசியலின் ஒரு பகுதியாக மாதுவாக்கள் இருந்து வருகிறார்கள். தற்போது, பாஜக முகாம் மற்றும் திரிணாமுல் முகாம் என இரண்டு பக்கமும் மாதுவாக்கள் இருக்கின்றனர். எனினும் குடியுரிமை இவர்களின் முக்கிய பிரச்னையாக இருந்து வருகிறது. அரசியல் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இவர்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், இவர்கள் அகதிகள் சமூகமாகவே பார்க்கப்படுகின்றன. குடியுரிமை திருத்தச் சட்டம் 2003, நிறைவேற்றப்பட்ட பின்னர், சட்டத்தின் பார்வையில் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக மாறினர். 2003 குடியுரிமை திருத்தம் அகதிக் குடும்பங்களில் பிறந்த குழந்தைகளுக்கு சாத்தியமற்றதாக பார்க்கப்படுகிறது. பெற்றோரில் ஒருவர் சட்டவிரோதமாக குடியேறியவர் என்று கருதப்பட்டால், அகதிக் குடும்பங்களில் பிறந்த குழந்தைகள் பிறப்பால் இந்திய குடிமக்களாக மாற முடியாது.

இதனால்தான் இந்த சமூகம், வாக்குரிமை மற்றும் ஆதார் அட்டை போன்ற அடையாளங்களை வைத்திருந்தாலும் நிரந்தர குடியுரிமையை கோருகிறது. CAA-வால் தங்களுக்கு குடியுரிமையை வழங்க முடியும் என இவர்கள் நம்புகின்றனர். இதனால்தான் சி.ஏ.ஏ. விதிமுறைகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதை மையப்படுத்தி தற்போது மாதுவாக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர்.

மாதுவாக்கள் பிரிவின் நிறுவனர் ஹரிச்சந்த் தாக்கூரின் வழித்தோன்றலும் பாஜக எம்.பி.யுமான சாந்தனு தாக்கூர், ``எங்களுக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது, ஆனால் எந்தவொரு அரசாங்கமும் 2003 குடியுரிமைச் சட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தால், நாங்கள் அனைவரும் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக இருப்போம். நாங்கள் பாதுகாப்பை விரும்புகிறோம், சி.ஏ.ஏ எங்களுக்கு குடியுரிமையை சரியாக வழங்க முடியும். உள்துறை அமைச்சர் அமித் ஷா கோரிக்கையை தீர்ப்பதாக உறுதியளித்தார். அவர் அவ்வாறு செய்யாவிட்டால், விளைவுகள் ஏற்படும்" என்று கூறி தனது தலைமையில் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி பேரணிகளை முன்னெடுத்து வருகிறார்.

சி.ஏ.ஏ விதிமுறைகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதால் மாதுவாக்கள் மத்தியில் எழுந்துள்ள கிளர்ச்சி பாஜகவுக்கு கூடுதல் அழுத்தத்தை கொடுத்துள்ளது. பாஜக, இச்சமூக மக்களிடம் இருந்து கணிசமான எதிர்ப்பை தற்போதையை காலங்களில் பெற்று வருகிறது. இதனால் பாஜக தலைவர்கள் அந்த சமூகத்தை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர். கடந்த வார இறுதியில் மாதுவாக்கள் ஆதிக்கம் செலுத்தும் தொகுதியான போங்கானுக்கு வருகை தரவிருந்த ஷா, அதைத் தவிர்த்தார். இருப்பினும், அவர் ஜனவரி மாதம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள தொகுதியை பார்வையிட உள்ளார்.

image

அதேபோல் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா இந்த டிசம்பர் தொடக்கத்தில் தாகூர் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து அவர்களின் குடியுரிமை கோரிக்கை தொடர்பாக உறுதியளித்தார். "நாங்கள் சி.ஏ.ஏ-வை கொண்டு வருவோம். அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்படும். நாங்கள் உறுதியளித்துள்ளோம். பாஜக வார்த்தைகளைத் திரும்பப் பெறாது" எனக் கூறியுள்ளார்.

இவர்களைப்போலவே இப்போது மம்தாவும் களத்தில் குதித்துள்ளார். திரிணாமுல் வெற்றிபெற மாதுவா மக்களின் மேம்பாட்டு திட்டங்களை அறிவித்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். நவம்பரில், மம்தா மாதுவாஸுக்கு ஒரு மேம்பாட்டு வாரியத்தை உருவாக்கி, ஹரிச்சந்த் தாக்கூர் என்ற பெயரில் ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்கி வருகிறார். மேலும் ஹரிச்சந்த் தாக்கூர் பிறந்த தேதியை ஒரு மாநில விடுமுறையாக அறிவித்தது, மாதுவா வரலாறு மற்றும் ஒரு பிரிவின் ஸ்தாபக ஆன்மீகத் தலைவர்களான ஹரிச்சந்த் மற்றும் குருசந்த் தாக்கூர் ஆகியோரின் பங்களிப்புகளை மாநில பாடத்திட்டத்தில் சேர்ப்பது என மம்தாவின் நடவடிக்கைகள் ஏராளம்.

மேம்பாட்டு நடவடிக்கைகளுடன் மாதுவா மக்களிடம் பாஜகவை பலவீனப்படுத்தும் வகையாக, ``பா.ஜ.க உங்களை சி.ஏ.ஏ.-வில் தவறாக வழிநடத்த முயற்சிக்கிறது. நீங்கள் அனைவரும் இங்கு குடிமக்கள். உங்களில் யாராவது குடியுரிமைக்கு விண்ணப்பித்தால், நீங்கள் ஒரு சட்டவிரோத மாதுவா என அடையாளம் காணப்படுவீர்கள்… வலையில் சிக்காதீர்கள்" என்று அப்பகுதியில் நடக்கும் கூட்டங்களில் பேசிவருகிறார் மம்தா.

2019 மக்களவை பொதுத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் இரண்டு குறிப்பிடத்தக்க மக்களவை இடங்களை பாஜகவிடம் இழந்தது. அது மாதுவா மக்கள் ஆதிக்கம் செலுத்தும் போங்கான் மற்றும் ரணகாட் தொகுதிகள்தான். இந்த இரண்டு இடங்களிலும் 14 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மாதுவாஸின் குறிப்பிடத்தக்க இருப்பைக் கொண்ட வட பெங்கால் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. இதனால் இங்கு பெறப்படும் வெற்றி என்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது. இதனை உணர்ந்தே இரு கட்சித் தலைவர்களும் மாறி மாறி அச்சமூக மக்களிடம் நெருக்கம் காண்பித்து வருகின்றனர்.

- மலையரசு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்