சென்னை அருகே உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் 'கோவாக்சின்' தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்டப் பரிசோதனை இன்று தொடங்குகிறது.
கொரோனா பாதிப்பைத் தடுக்க, இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமும் ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனமும் இணைந்து 'கோவாக்சின்' என்ற பெயரிலான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தது. இதை மனிதர்கள் மீது செலுத்தி பரிசோதிக்க நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. தமிழகத்தில் 'கோவாக்சின்' தடுப்பு மருந்தை பரிசோதிக்க சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அங்கு கடந்த ஜூலை 23-ஆம் தேதி 30 தன்னார்வலர்களைக் கொண்டு முதல்கட்டமாகவும், 50 தன்னார்வலர்களைக் கொண்டு இரண்டாம் கட்டமாகவும் பரிசோதனை நடத்தப்பட்டது.
இவ்விரு பரிசோதனைகளிலும் 'கோவாக்சின்' தடுப்பு மருந்தின் ஆற்றல் நல்ல பலனை அளித்த நிலையில், இதன் தொடர்ச்சியாக இன்று முதல் 3 ஆம் கட்ட பரிசோதனை தொடங்குகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் வழிகாட்டுதலின் படி இந்த ஆராய்ச்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருவதாக எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2JWRTVsசென்னை அருகே உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியில் 'கோவாக்சின்' தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்டப் பரிசோதனை இன்று தொடங்குகிறது.
கொரோனா பாதிப்பைத் தடுக்க, இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமும் ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனமும் இணைந்து 'கோவாக்சின்' என்ற பெயரிலான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தது. இதை மனிதர்கள் மீது செலுத்தி பரிசோதிக்க நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. தமிழகத்தில் 'கோவாக்சின்' தடுப்பு மருந்தை பரிசோதிக்க சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
அங்கு கடந்த ஜூலை 23-ஆம் தேதி 30 தன்னார்வலர்களைக் கொண்டு முதல்கட்டமாகவும், 50 தன்னார்வலர்களைக் கொண்டு இரண்டாம் கட்டமாகவும் பரிசோதனை நடத்தப்பட்டது.
இவ்விரு பரிசோதனைகளிலும் 'கோவாக்சின்' தடுப்பு மருந்தின் ஆற்றல் நல்ல பலனை அளித்த நிலையில், இதன் தொடர்ச்சியாக இன்று முதல் 3 ஆம் கட்ட பரிசோதனை தொடங்குகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் வழிகாட்டுதலின் படி இந்த ஆராய்ச்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருவதாக எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்