டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்து, இந்தப் போராட்டம் குறித்து இந்தியாவிடம் பேசுமாறு தங்கள் நாட்டின் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப்பிற்கு, இங்கிலாந்து எம்.பி.க்கள் 36 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.
டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது களமிறங்கியுள்ளனர். இங்கிலாந்தின் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப், இந்தப் போராட்டம் குறித்து இந்தியாவிடம் கேள்வி எழுப்புமாறு 36 எம்.பி.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். இங்கிலாந்து தொழிற்கட்சியின் தன்மஞ்சித் சிங் தேசி தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரிவு, இந்தியாவின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்தக் கடிதத்தை எழுதியுள்ளனர்.
“இந்தியா அறிமுகப்படுத்தியுள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்கள் காரணமாகவும், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலையை உறுதி செய்யவும் இந்திய அரசு தவறியதால் நாடு முழுவதும் பரவலாக விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். இது பிரிட்டனில் உள்ள சீக்கியர்களுக்கும் பஞ்சாபுடன் தொடர்புடையவர்களுக்கும் கவலை அளிக்கிறது.
பல பிரிட்டிஷ் சீக்கியர்களும் இந்த விஷயம் குறித்து கவலை கொண்டுள்ளனர். ஏனென்றால் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பஞ்சாபில் உள்ள அவர்களின் மூதாதையர் இச்சட்டங்களால் நேரடியாக பாதிக்கப்படுகிறார்கள்” என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்