சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் முகவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட அனைவரையும் கைதுசெய்ய காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது.
மதுரை கோரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெற்றோரை இழந்த சிறுமியை கடந்த 2015ஆம் ஆண்டு ஜெயலட்சுமி என்ற உறவினர் 10 வயதில் அழைத்து சென்று வளர்த்து வந்துள்ளார். தன்னை நம்பி வந்த சிறுமியையும் ஜெயலட்சுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் அனார்கலி, சுமதி, ஐஸ் சந்திரா, தங்கம், ஜெயலட்சுமி, சரவணபிரபு, சின்னதம்பி ஆகிய பெண்களின் உதவியுடன் மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டம், மாநிலங்களை சேர்ந்த நபர்களிடம் அந்த சிறுமியை பாலியல் தொழிலுக்கு வற்புறுத்தி ஆட்படுத்தியதாக கூறப்படுகிறது.
சிறுமியை ஏமாற்றி நாள்தோறும் ஒவ்வொரு நபர்களிடம் பாலியல் தொழிலில் ஈடுபடவைத்த கொடுமையும் அரங்கேறியுள்ளது. மதுரை மாவட்டத்தில் பாலியல் தொழிலில் முக்கிய புள்ளியாக தேடப்பட்டுவந்த சிறுமியின் உறவினரான ஜெயலட்சுமி உள்ளிட்ட 5 பெண் முகவர்களையும் ஆட்கடத்தல் மற்றும் பாலியல் தொழில் தடுப்பு காவல்துறையினர் பலமுறை பின்தொடர்ந்து கைதுசெய்ய முயன்றபோதும் தப்பியுள்ளனர்.
இதனையடுத்து மதுரை உத்தங்குடி அருகேயுள்ள விஐபி நகர் பகுதியில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, துன்புறுத்துவதாக கிடைத்த தகவலையடுத்து ஆட்கடத்தல் விபச்சார தடுப்புப் பிரிவு ஆய்வாளர் ஹேமமாலா தலைமையிலான தனிப்படையினர் நேரில் சென்று சிறுமியை மீட்டதுடன், சரவணபிரபு என்பவரை கைது செய்தனர். மேலும் சிறுமியிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிறுமியிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து அவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ஜெயலட்சுமி, சுமதி, ஐஸ் சந்திரா உள்ளிட்ட 5 பெண் முகவர்களையும் தேடிவந்த நிலையில் இன்று காலை போலீசார் அவர்களை கைது செய்தனர். ஜெயலட்சுமி உள்ளிட்ட 5 பேரும் 11 வயதிலிருந்தே சிறுமியை நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களிடம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்துள்ளனர்.
பாலியல் தொழில் பெண் முகவர்களான அனார்கலி, சுமதி, சந்திரா, தங்கம், ஜெயலட்சுமி, சரவணபிரபு ஆகிய 6 பேரையும் கைது செய்த நிலையில், இவர்களுக்கு உதவியாக இருந்த ஆட்டோ ஓட்டுனரான சின்னதம்பி தலைமறைவாகி விட்டார். 6 பேரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் பாலியல் தொழிலில் முக்கிய புள்ளிகளாக தேடப்பட்டு வந்த 5 பெண் முகவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், சிறுமியை கடந்த 3 ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்திய நபர்களின் விவரங்களை சேகரித்து அவர்களை கைதுசெய்ய தனிப்படை அமைக்கும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. இதில் 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.
சென்னையில் ஏற்கனவே சிறுமி ஒருவரை 100க்கும் மேற்பட்டோர் பாலியில் துன்புறுத்தலில் ஈடுபடுத்திய சம்பவத்தை மிஞ்சும் வகையில் மதுரையில் இந்த கொடூர செயல் அரங்கேறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்