நிவர் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள், மீட்பு - நிவாரண நடவடிக்கைகளை உள்ளடக்கிய லைவ் அப்டேட்ஸ் இங்கே...
நவ.26,2020 | காலை 08.35 மணி: நிவர் புயலானது புதுச்சேரியில் இருந்து 50கிமீ வடமேற்கு நிலப்பகுதியில் நிலைகொண்டுள்ளது. தற்போது தீவிர புயலாக உள்ள நிவர், அடுத்த 3 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக புதுச்சேரி, கடலூர் பகுதிகளில் மழை பெய்துகொண்டே இருக்கிறது.
புதுச்சேரியில் இருந்து நம் செய்தியாளர் எல்லுச்சாமி கார்த்திக்கின் லைவ் வீடியோ அப்டேட்ஸ்...
<iframe src="https://ift.tt/3674Vsn" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>
நவ.26,2020 | காலை 07.05 மணி: தாம்பரத்தை அடுத்துள்ள முடிச்சூரில் சுமார் 10ஆயிரம் குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. தரைத்தளம் வரை தண்ணீர் தேங்கியுள்ளதால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். விரிவான செய்திக்கு > வெள்ளக்காடு.. தரைத்தளம் வரை தண்ணீர்... வீடுகளிலேயே முடங்கிய முடிச்சூர் மக்கள்!
நிவர் புயலால் புதுச்சேரி பகுதியின் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. | புகைப்படங்கள்: எள்ளுச்சாமி
புதுச்சேரியில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன. மேலும் மழையும் பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சாய்ந்துள்ள மரங்களை போலீசாரின் உதவியுடன் பொதுப்பணித்துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
புகைப்படங்கள்: எல்லுச்சாமி கார்த்திக் (செய்தியாளர்)
நவ.26,2020 | அதிகாலை 06.04மணி: வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது நேற்று இரவு 11.30 முதல் இன்று அதிகாலை 2.30க்குள் கரையை கடந்தது. நிவர் புயல் குறித்து வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்ட தகவல்கள்...
நவ.26,2020 | அதிகாலை 04.04மணி: நிவர் புயல் அதி தீவிர புயலாக கரையை கடக்க தொடங்கியது. அதன்பின்னர், மையப்பகுதி கடந்து கொண்டிருக்கும்போது அதி தீவிர புயல் தீவிரப் புயலாக வலுவிழந்தது. பின்னர், தீவிர புயலாகவே நிவர் புயல் முழுவதும் கரையை கடந்துள்ளது. இத்தகவலை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார். தீவிர புயலாக இருக்கும் நிவர், ஆறு மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவ.26,2020 | அதிகாலை 03.40 மணி: நிவர் புயலின் மையப்பகுதி இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 2.30 மணி வரை கரையை கடந்துள்ளது. தற்போது புயலின் பின்பகுதி கரையை கடந்து வருகிறது.
நவ.26,2020 | அதிகாலை 03.19 மணி: அதிதீவிர புயலாக கரையை கடந்து வந்த நிவர் புயல் தீவிர புயலாக வலுவிழந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவ.26,2020 | அதிகாலை 03.10 மணி: நிவர் புயல் கரையை கடப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. புயலின் மையப்பகுதி 25 சதவீதத்திற்கு மேல் கடந்துள்ள நிலையில் மிகவும் தாமதமாக நகர்ந்து வருகிறது. இந்த புயல் முழுவதும் கடக்க இன்னும் 3 முதல் 4 மணிநேரம் கூட ஆகலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தாமதத்தினால் புயல் வலுவிழக்காதது எனவும் தாமதத்திற்கு காரணம் புயல் கரையை கடக்கும் திசைக்கு எதிரே காற்று வீசுவதால் தாமதம் ஏற்படுவதாக வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.
நவ.26,2020 | அதிகாலை 03.00 மணி: இதுவரை விஷயங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன : 3 மணிக்கு வீடியோ வெளியிட்ட கிரண்பேடி
It’s 3 AM. So far matters under control. ???? pic.twitter.com/SX0VZhoALV
— Kiran Bedi (@thekiranbedi) November 25, 2020
நவ.26,2020 | நள்ளிரவு 02.44 மணி: நிவர் புயலின் மையப்பகுதி புதுச்சேரிக்கு அருகே கரையை கடந்து வரும் நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னை மெரினா கடற்கரை, சாந்தோம், அடையாறு, பட்டினப்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, ஆதம்பாக்கம், வேளச்சேரி பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
நவ.26,2020 | நள்ளிரவு 02.25 மணி: நிவர் புயலின் மையப்பகுதி புதுச்சேரிக்கு வடக்கே 25 கி.மீ தொலைவில் கரையை கடந்து வருகிறது. இதனால் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நவ.26,2020 | நள்ளிரவு 01.50 மணி: புதுச்சேரியில் இருந்து வடக்கே 25 கி.மீ தூரத்தில் நிவர் புயலின் மையப்பகுதி கரையை கடந்து வருகிறது. சென்னையில் இருந்து 100 கி.மீ தொலைவில் 16 கி.மீ வேகத்தில் நிவர் புயல் கரையை கடந்து வருகிறது. இதனால் கடலோரப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. விழுப்புரம், கடலூர், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
நவ.26,2020 | நள்ளிரவு 01.09 மணி: புதுச்சேரிக்கு அருகே நிவர் புயர் கரையை கடந்து வரும் நிலையில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. பல இடங்களில் சூறைக்காற்றால் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவ.26,2020 | நள்ளிரவு 01.00 மணி: நிவர் புயலின் மையப்பகுதி புதுச்சேரிக்கு வடக்கே கரையை கடந்து வருவதை தொடர்ந்து சென்னையில் பலத்த காற்று வீசி வருகிறது. சில மணி நேரங்களாக சென்னையி மழை இல்லாத நிலையில் பலத்த காற்று வீசி வருகிறது.
நவ.26,2020 | நள்ளிரவு 12.58 மணி: செம்பரம்பாக்கம் ஏரியில் நீரின் வெளியேற்றம் 9000 கன அடியில் இருந்து 7000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 8,436 கன அடியாக இருப்பதால் நீர் வெளியேற்றம் 2000 கன அடி குறைக்கப்பட்டுள்ளது.
நவ.26,2020 | நள்ளிரவு 12.51 மணி: அதிதீவிர புயலான நிவர் புயலின் முன்பகுதி புதுச்சேரிக்கு வடக்கே 30 கி.மீ தொலைவில் கரையை கடந்து வருகிறது. இன்னும் 2 மணி நேரத்தில் புயலின் மையப்பகுதி கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூரிலிருந்து 40 கி.மீ தூரத்திலும், சென்னையில் இருந்து 110 கி.மீ தூரத்திலும் புயல் கரையை கடந்து வருகிறது.
நவ.26,2020 | நள்ளிரவு 12.42 மணி: நிவர் புயல் புதுச்சேரிக்கு வடக்கே 15 கி.மீ வேகத்தில் கரையை கடக்க தொடங்கியுள்ளது. இதனால் கடலூர், புதுச்சேரியில் அதீத கனமழை பெய்து வருகிறது. கடலூரில் 22 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், இதுவரை கடலூரில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என வேளாண்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பொதுவிடுமுறையிலும் அதிகாரிகள் வேலைப்பார்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவ.26,2020 | நள்ளிரவு 12.31 மணி: நிவர் புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ள நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்த பிறகு பாதிப்பு இல்லாத பகுதிகளுக்கு மின்சாரம் படிப்படியாக வழங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நவ.26,2020 | நள்ளிரவு 12.16 மணி: புதுச்சேரிக்கு வடக்கே புயலின் மையப்பகுதி கரையை கடக்கும் என கணிக்கப்படுள்ளது. தற்போது புயலின் முன்பகுதி கரையை கடந்து வருகிறது. இதனால் கடலூர், புதுச்சேரி பகுதிகளில் 120 லிருந்து 145 கி.மீ வரை காற்று வேகமாக வீசி வருகிறது.
நவ.26,2020 | நள்ளிரவு 12.10 மணி: சாய்ந்த மரங்களை இரவோடு இரவாக வெட்டி அப்புறப்படுத்தும் மாநகராட்சி அதிகாரிகள்
The time is 11:30pm and our team is still on field clearing the fallen trees, so you can commute easily without any blockages in the morning.@SPVelumanicbe@albyjohnV @jmeghanathreddy@sridharpn@akshp91#HereToServe #GCC#NivarCycloneUpdate #ChennaiRain pic.twitter.com/8a3hppuBUw
— Greater Chennai Corporation (@chennaicorp) November 25, 2020
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்