கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் வீரர்கள் 7 பேர் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை திருப்பி அனுப்ப நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் யோசித்து வருகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. 34 வீரர்கள் உள்பட மொத்தம் 54 பேர் நியூசிலாந்துக்கு சென்றுள்ளனர். முதல் டி 20 போட்டி டிசம்பர் 18 ஆம் தேதி தொடங்குகிறது. நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் அனைவரும் தற்போது 14 நாட்கள் சுய தனிமையில் உள்ளனர். நியூசிலாந்து சென்றவுடன் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் 6 வீரர்களுக்கு நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மற்ற வீரர்கள் அனைவரும் சுய தனிமையில் இருக்க வேண்டும் என்றும், எந்தக் காரணம் கொண்டும் வெளியே செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் அதை மீறி சில வீரர்கள் வெளியே நடமாடியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நியூசிலாந்து சுகாதாரத் துறை பாக். அணிக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் எச்சரிக்கையை மீறி பாக். வீரர்கள் மீண்டும் வெளியே நடமாடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நியூசிலாந்து நாட்டு சுகாதாரத் துறை பாக்.அணிக்கு கடைசி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதில் இனியும் விதிமீறல் தொடர்ந்தால் வீரர்கள் அனைவரையும் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பி வைத்து விடுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் 7 ஆவது வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை ரத்து செய்யலாமா என்று நியூசிலாந்து ஆலோசித்து வருகிறது. எனினும் நியூசிலாந்து சுகாதாரத்துறை விடுத்த எச்சிர்கைக்கு பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/37ceANGகிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் வீரர்கள் 7 பேர் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை திருப்பி அனுப்ப நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் யோசித்து வருகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. 34 வீரர்கள் உள்பட மொத்தம் 54 பேர் நியூசிலாந்துக்கு சென்றுள்ளனர். முதல் டி 20 போட்டி டிசம்பர் 18 ஆம் தேதி தொடங்குகிறது. நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் அனைவரும் தற்போது 14 நாட்கள் சுய தனிமையில் உள்ளனர். நியூசிலாந்து சென்றவுடன் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் 6 வீரர்களுக்கு நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மற்ற வீரர்கள் அனைவரும் சுய தனிமையில் இருக்க வேண்டும் என்றும், எந்தக் காரணம் கொண்டும் வெளியே செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் அதை மீறி சில வீரர்கள் வெளியே நடமாடியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நியூசிலாந்து சுகாதாரத் துறை பாக். அணிக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் எச்சரிக்கையை மீறி பாக். வீரர்கள் மீண்டும் வெளியே நடமாடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நியூசிலாந்து நாட்டு சுகாதாரத் துறை பாக்.அணிக்கு கடைசி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதில் இனியும் விதிமீறல் தொடர்ந்தால் வீரர்கள் அனைவரையும் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பி வைத்து விடுவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் 7 ஆவது வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை ரத்து செய்யலாமா என்று நியூசிலாந்து ஆலோசித்து வருகிறது. எனினும் நியூசிலாந்து சுகாதாரத்துறை விடுத்த எச்சிர்கைக்கு பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்