பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இருந்து டெல்லியில் போராட்டம் நடத்த சென்ற விவசாயிகள் மீது காவல் துறையினர் பலப்பிரயோகம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, தண்ணீரை பீய்ச்சியடித்தல், கல் வீச்சு.டெல்லி மற்றும் ஹரியானா மாநில எல்லையில் உள்ள ஊரான சிங்கு போர்க்களம் போல காட்சியளிக்கின்றன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்த பேரணியாக சென்ற போது எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அலையலையாக டிராக்டர்களில் வந்த விவசாயிகளை போலீசார் கண்ணீர் புகை குண்டுகள், தண்ணீர் பீய்ச்சியடித்தல், தடியடி என கலைந்து போகச் செய்ய முயற்சித்தனர்.
மணல் நிரப்பப்பட்ட லாரிகள், இரும்புக் கம்பிகளாலான தடுப்புகள் போன்றவற்றையும் வைத்து விவசாயிகளை தடுக்க முயற்சித்தனர். இதனால் ஆவேசமான விவசாயிகள் பதிலுக்கு கற்களை வீசத் தொடங்கியதுடன் காவல் துறையினர் வைத்திருந்த தடுப்புகளையும் தள்ளிவிட்டு முன்னேற முயன்றனர். நிலைமை மோசமான நிலையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் விவசாயிகளை டெல்லிக்குள் காவல் துறை அனுமதித்தது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய அமைப்புகளுடன் வரும் 3ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் புராரியில் உள்ள நிரான்காரி மைதானத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ளது. அதே நேரம் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்துள்ளார். அடுத்த கட்டமாக டிசம்பர் மூன்றாம் தேதி பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும், கொரோனா தொற்று பரவல் மற்றும் குளிர்காலத்தை கருத்தில் கொண்டு போராட்டத்தை விவசாயிகள் வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை அண்மையில் நிறைவேற்றியது. இதனால் குறைந்த பட்ச ஆதரவு விலை நடைமுறை நீக்கப்படும் என்றும் தங்கள் விளைபொருட்களை விற்க பெருந்தொழில் நிறுவனங்களை சார்ந்திருக்க வேண்டும் என்றும் விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். விவசாயிகளை பாதிக்கும் புதிய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2Vd4bM6பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இருந்து டெல்லியில் போராட்டம் நடத்த சென்ற விவசாயிகள் மீது காவல் துறையினர் பலப்பிரயோகம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்