வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற பஞ்சாப் மாநில விவசாயிகளை காவல்துறையினர் தண்ணீரை பீச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப்பில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டங்களின் ஒரு பகுதியாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்வேறு வாகனங்களில் டெல்லி நோக்கி பேரணியாகச் செல்கின்றனர்.
தங்கள் மாநிலத்தின் வழியாகச் செல்வதற்கு தடைவிதித்த ஹரியானா அரசு, மாநில எல்லைகளை மூடி சீல்வைத்திருந்ததுது. எனினும் தடுப்புகளை தகர்ந்து பஞ்சாப் விவசாயிகள் ஹரியானாவிற்குள் நுழைந்தனர். கர்னல் பகுதியில் விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீச்சி அடித்தும் கலைத்தனர்.
ஹரியானா அரசின் இந்த நடவடிக்கைக்கு பஞ்சாப் முதல்வர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விவசாயிகள் தங்கள் குரலை டெல்லியில் எழுப்புதவற்கு வழிவிடுமாறு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே பஞ்சாப் விவசாயிகள் தலைநகருக்குள் செல்லாமல் தடுக்க, டெல்லி ஹரியானா எல்லையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன. இதனால் ஹரியானா, டெல்லி எல்லைப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே எந்த தடைகள் வந்தாலும் தாங்கள் டெல்லி சென்றே தீருவோம் என விவசாய அமைப்பினர் தெரிவித்தனர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/2V9juFvவேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற பஞ்சாப் மாநில விவசாயிகளை காவல்துறையினர் தண்ணீரை பீச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப்பில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டங்களின் ஒரு பகுதியாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்வேறு வாகனங்களில் டெல்லி நோக்கி பேரணியாகச் செல்கின்றனர்.
தங்கள் மாநிலத்தின் வழியாகச் செல்வதற்கு தடைவிதித்த ஹரியானா அரசு, மாநில எல்லைகளை மூடி சீல்வைத்திருந்ததுது. எனினும் தடுப்புகளை தகர்ந்து பஞ்சாப் விவசாயிகள் ஹரியானாவிற்குள் நுழைந்தனர். கர்னல் பகுதியில் விவசாயிகள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீச்சி அடித்தும் கலைத்தனர்.
ஹரியானா அரசின் இந்த நடவடிக்கைக்கு பஞ்சாப் முதல்வர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விவசாயிகள் தங்கள் குரலை டெல்லியில் எழுப்புதவற்கு வழிவிடுமாறு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே பஞ்சாப் விவசாயிகள் தலைநகருக்குள் செல்லாமல் தடுக்க, டெல்லி ஹரியானா எல்லையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன. இதனால் ஹரியானா, டெல்லி எல்லைப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே எந்த தடைகள் வந்தாலும் தாங்கள் டெல்லி சென்றே தீருவோம் என விவசாய அமைப்பினர் தெரிவித்தனர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்