தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 1ஆம் தேதி முதல் மீண்டும் பரவலாக மழை பெய்ய தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் பாதிப்பில் இருந்து மக்கள் மெல்ல மெல்ல மீண்டு வரும் சூழலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்றும் அது, வரும் 30ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டிசம்பர் 1 முதல் 3ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நிவர் புயல் கரையை கடந்த நிலையில், தற்போது வலுவிழந்து குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக தெற்கு ஆந்திரா மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட வடமேற்கு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் 23 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/2VdbVxn

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News