Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

தமிழகத்தில் பரவலாக மழை.. டெல்லி போராட்டம்.. இன்னும் சில முக்கியச் செய்திகள்!

நிவர் புயல் பாதிப்புகள் குறித்து முதல்வரிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார் பிரதமர். புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் தலா 2 லட்சம் ரூபாய் நிதி உதவி அறிவிப்பு.

நிவர் புயலால் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி. பயிர் சேதத்தை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவு.

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி. தமிழகம், புதுவையில் டிசம்பர் முதல் தேதியில் இருந்து மழை பெய்ய வாய்ப்பு.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை. பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் 41 கிராமங்களுக்கு வெள்ள அபாயம்.

ஆந்திராவின் பிச்சாட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 7,800 கன அடி நீர் திறப்பு. ஆரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரள்வதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை.

பூண்டி நீர்த்தேக்கம் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. மதுராந்தகம் ஏரியும் நிரம்பும் தருவாயில் இருப்பதாக அறிவிப்பு

வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூர் மாவட்டத்தில் 11 ஆயிரம் வாத்துகள் உயிரிழப்பு. காட்பாடியில் 2 ஆயிரத்து 500 நாட்டுக்கோழிகள் நீரில் மூழ்கின

திருவண்ணாமலையில் நாளை தீபத் திருவிழா நடைபெறுவதையொட்டி கட்டுப்பாடுகள் அமல். வெளியூர் பக்தர்களும், வாகனங்களும் ஊருக்குள் நுழைய தடை விதிப்பு

டிசம்பர் மாதத்திற்கான பொதுமுடக்க தளர்வுகள். ஆட்சியர்கள், மருத்துவ குழுவினருடன் முதல்வர் இன்று ஆலோசிக்கிறார்

நடப்பாண்டில் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்கள் இட ஒதுக்கீட்டுக்கு மறுப்பு. மத்திய, மாநில அரசுகள் கூட்டணியாக துரோகம் செய்துவிட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு.

புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மருத்துவக் கலந்தாய்வு வரும் 30 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது.டிசம்பர் 10ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என அறிவிப்பு

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் பேரணி டெல்லியை அடைந்தது. போராட்டத்தை வாபஸ் பெற மத்திய அமைச்சர் கோரிக்கை. பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு.

விருத்தாசலம் கிளைச் சிறையில் இறந்தவர் உடல் 23 நாட்களுக்குப் பிறகு மறுபிரேத பரிசோதனை. உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊரில் அடக்கம்

ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி மோசென் ஃபக்ரிசாதே சுட்டுக் கொலை. இஸ்ரேல் அரசுக்கு தொடர்பு இருப்பதாக ஈரான் அமைச்சர் குற்றச்சாட்டு.

இந்திய அணியுடனான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி.66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ஈட்டிய ஆஸ்திரேலியா.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/39hdAKK

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்