இந்திய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 520 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. புதிதாக 44,684 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 87,73,479 ஆக அதிகரித்து, 88 லட்சத்தை எட்டும் நிலையில் இருக்கிறது.
இதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து நான்காவது நாளாக, 5 லட்சத்துக்கும் கீழாக குறைந்து, சனிக்கிழமை 4,80,719 ஆக இருந்தது. சிகிச்சை பெறுவோர் விகிதம் மேலும் குறைந்து 5.48% ஆக இருந்தது.
தினசரி புதிய தொற்று பாதிப்பு எண்ணிக்கையை விட, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 44,684 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல, 24 மணி நேரத்தில், 47,992 பேர் குணமடைந்துள்ளனர்.
மத்திய அரசின் விதிமுறைகளை மாநில / யூனியன் பிரதேச அரசுகள் பின்பற்றி, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டதால், புதிதாக தொற்று பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த ஐந்து வாரங்களாக தினசரி சராசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
இதேபோல, குணமடைதல் விகிதம் தொடர்ந்து உயர்ந்து இன்று 93%-ஐ தாண்டியது. தேசிய மொத்த விகிதம் 93.05% ஆகும். நோயிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 81,63,572 ஆக இருந்தது. குணமடைபவர்கள் மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்கள் இடையிலான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து, தற்போது 76,82,853 ஆக உள்ளது.
புதிதாக குணமடைந்தவர்களில் 75.38% பேர் பத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். கடந்த 24 மணி நேரத்தில், கோவிட் தொற்றிலிருந்து 6,498 பேர் குணமடைந்துள்ள நிலையில், டெல்லி முதலிடத்தில் உள்ளது. 6,201 பேர் குணமடைந்து, கேரளா இரண்டாம் இடத்திலும், 4,543 பேருடன் மகாராஷ்டிரா மூன்றாம் இடத்திலும் உள்ளன.
புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதில், பத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் மட்டும் 76.38% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில், டெல்லியில் புதிதாக 7,802 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, முதலிடத்தில் உள்ளது. கேரளாவில் புதிதாக 5,804 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 4,132 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, மூன்றாவது இடத்தில் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 520 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இதில், 79.23% பத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தது. மகாராஷ்டிராவில் 24.4% ஆக இருந்த உயிரிழப்பின் எண்ணிக்கை 127 ஆகும். டெல்லி, மேற்கு வங்கம் முறையே உயிரிழப்பு எண்ணிக்கை 91, 51 ஆக இருந்தது' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3lvSrQ1இந்திய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 520 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. புதிதாக 44,684 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 87,73,479 ஆக அதிகரித்து, 88 லட்சத்தை எட்டும் நிலையில் இருக்கிறது.
இதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து நான்காவது நாளாக, 5 லட்சத்துக்கும் கீழாக குறைந்து, சனிக்கிழமை 4,80,719 ஆக இருந்தது. சிகிச்சை பெறுவோர் விகிதம் மேலும் குறைந்து 5.48% ஆக இருந்தது.
தினசரி புதிய தொற்று பாதிப்பு எண்ணிக்கையை விட, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 44,684 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல, 24 மணி நேரத்தில், 47,992 பேர் குணமடைந்துள்ளனர்.
மத்திய அரசின் விதிமுறைகளை மாநில / யூனியன் பிரதேச அரசுகள் பின்பற்றி, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டதால், புதிதாக தொற்று பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த ஐந்து வாரங்களாக தினசரி சராசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
இதேபோல, குணமடைதல் விகிதம் தொடர்ந்து உயர்ந்து இன்று 93%-ஐ தாண்டியது. தேசிய மொத்த விகிதம் 93.05% ஆகும். நோயிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 81,63,572 ஆக இருந்தது. குணமடைபவர்கள் மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்கள் இடையிலான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து, தற்போது 76,82,853 ஆக உள்ளது.
புதிதாக குணமடைந்தவர்களில் 75.38% பேர் பத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். கடந்த 24 மணி நேரத்தில், கோவிட் தொற்றிலிருந்து 6,498 பேர் குணமடைந்துள்ள நிலையில், டெல்லி முதலிடத்தில் உள்ளது. 6,201 பேர் குணமடைந்து, கேரளா இரண்டாம் இடத்திலும், 4,543 பேருடன் மகாராஷ்டிரா மூன்றாம் இடத்திலும் உள்ளன.
புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதில், பத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் மட்டும் 76.38% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில், டெல்லியில் புதிதாக 7,802 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, முதலிடத்தில் உள்ளது. கேரளாவில் புதிதாக 5,804 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 4,132 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, மூன்றாவது இடத்தில் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 520 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இதில், 79.23% பத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தது. மகாராஷ்டிராவில் 24.4% ஆக இருந்த உயிரிழப்பின் எண்ணிக்கை 127 ஆகும். டெல்லி, மேற்கு வங்கம் முறையே உயிரிழப்பு எண்ணிக்கை 91, 51 ஆக இருந்தது' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்