Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

'ரூ.1,200-க்கு அசத்தல் உபகரணம்!' - கோவை வேளாண் விஞ்ஞானிகளுக்கு தேசிய தண்ணீர் விருது

கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தின் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழு-வின் (The Indian Council of Agricultural Research) கோவையைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு 'தேசிய தண்ணீர் விருதுகள் 2019'-க்கான முதல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் மற்றும் இணை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா ஆகியோர் முன்னிலையில், 2020 நவம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இணையம் மூலம் துவக்கி வைத்தார்.

 

image

இந்நிகழ்ச்சியில், "மண் ஈரப்பதக் காட்டி மற்றும் நீர்ப்பாசன நீர் மேலாண்மையில் அதன் செயல்பாடு" என்னும் தலைப்பிலான பணிக்காக டாக்டர் கே ஹரி, டாக்டர் டி புத்திர பிரதாப், டாக்டர் பி முரளி, டாக்டர் ஏ ரமேஷ் சுந்தர் மற்றும் டாக்டர் பி சிங்காரவேலு ஆகியோர் இந்த பரிசை பெற்றுள்ளனர். மேலும் ரூபாய் இரண்டு லட்சம் ரொக்கப் பரிசையும், பட்டயம் ஒன்றையும் தங்களது பணிக்காக ICAR-கரும்பு இனப்பெருக்க நிறுவனம், கோயம்புத்தூரை சேர்ந்த விஞ்ஞானிகள் பெற்றுள்ளனர்.

இந்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் நீர்வளங்கள், ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கை புத்தாக்கத் துறையால் 'சிறந்த ஆராய்ச்சி/ புதுமை/ நீர் சேமிப்பில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்' என்னும் பிரிவில் இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

image

இந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள மண் ஈரப்பதக் காட்டி (Soil Moisture Indicator - SMI) என்ற உபகரணம் பயனர்கள் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் நீர்ப்பாசனத்தை திட்டமிடும்போது ஈரப்பதத்தை மதிப்பிடுவதில் விவசாயிகளுக்கு இது உதவியாக இருக்கும். இதன் மூலம் குறிப்பிட்ட அளவு தண்ணீரை சேமிக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேலும் இதன்விலை ரூ.1200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் அனைவரும் வாங்கிப் பயன்பெற முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்