Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

‘ரோஹித் சர்மா 100% உடற்தகுதியுடன் இல்லை’ - கங்குலி

https://ift.tt/2IFBC72

ஐபிஎல் தொடர் முடிந்து இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய தொடர்களில் விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்நிலையில் பிட்னஸ் காரணமாக ரோஹித் சர்மா ஆஸ்திரேலிய தொடரில் முன்னதாக இடம்பெறவில்லை. விராட் கோலியின் மனைவி பிரசவத்தை எதிர்நோக்கியிருப்பதால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினார். இதையடுத்து அவருக்குப் பதிலாக ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார்.
 
image
 
ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டிருந்தாலும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணியில் இடம்பெறவில்லை. இந்நிலையில், அதற்கான காரணத்தை பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து பேசியுள்ள கங்குலி, ரோஹித் சர்மா 70 சதவிகிதம் மட்டும் ஃபிட்டாக இருக்கிறார். அதனால் தான் ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் எடுக்கப்படவில்லை என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
 
சாஹா காயத்தால் அவதிப்பட்ட நிலையிலும் டெஸ்ட் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சாஹாவின் காயம் குறித்து பேசிய கங்குலி, டெஸ்ட் போட்டிக்கு அவர் தகுதியானவர் என்று கூறினார்.
 
முன்னதாக ஐபிஎல் சீசனின் இடையே தொடைப்பகுதி காயம் காரணமாக இடையில் சில போட்டிகளில் ஆடாத ரோஹித் சர்மா, நாக் அவுட் போட்டிகளில் மீண்டும் களமிறங்கி, இறுதிப்போட்டியில் அருமையாக ஆடி அரைசதம் அடித்து மும்பை அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார்.
 
துபாயில் இருந்து நேரடியாக ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு இந்திய அணி இன்று சென்றுள்ளது. சிட்னி நகரிலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள சிட்னி ஒலிம்பிக் பார்க் ஏரியா பகுதியில் உள்ள புல்மேன் விடுதியில் இந்திய வீரர்கள் தங்க வைக்கப்படுகிறார்கள். இதையடுத்து இந்திய அணி வீரர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அடுத்த 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்திக் கொள்வார்கள்.  14 நாள்களுக்குப் பிறகு சிட்னி நகருக்குள் இந்திய வீரர்கள் அழைத்து வரப்படுவார்கள். அதன்பின்னர், சிட்னி மைதானத்திலும் பயிற்சிகள் பெற அனுமதிக்கப்படுவார்கள்.
 
ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடர் நவம்பர் 27-லிலும் டி20 தொடர் டிசம்பர் 4-லிலும் டெஸ்ட் தொடர் டிசம்பர் 17-லிலும் தொடங்குகின்றன.
டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் இந்தியாவுக்கு எதிராக விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்